tamilnadu

img

பட்டமளிப்பு விழா

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், வேதாரண்யம், பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரியின் ஆறாவது ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி முதல்வர் முருகன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 2018-19 ஆம் கல்வியாண்டில் பல்கலைக் கழகங்கள் அளவில் தமிழ் இளங்கலையில் தங்கப்பதக்கம் பெற்ற சுகுணா என்னும் மாணவிக்கு ரூ ஐந்தாயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. பல்கலைக் கழகத் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள இளங்கலைப் பிரிவில் 3 பேர் முதுகலைப் பிரிவில் 5 பேருக்குப் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டன. இளங்கலைப் பிரிவில் 390 மாணவ, மாணவிகளுக்கும் முதுகலைப் பிரிவில் 120 பேருக்கும் பட்டச் சான்றிதழ்களை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் ரகுநாதன் வழங்கினார்.