தஞ்சாவூர் ஜூன்.14- திருநெல்வேலியில் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர், இளம்போராளி தோழர் அசோக்கை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தினால், சாதி ஆதிக்க வெறி சக்திகள் திட்டமிட்டு படுகொலை செய்தனர்.இதனைக் கண்டித்தும், படுகொலை செய்த சாதிவெறி கும்பலை கைது செய்ய வலியுறுத்தியும், முறையான நடவடிக்கை எடுத்திடாத காவல்துறையை கண்டித்தும் தஞ்சை ரயிலடியில் வியாழக்கிழமை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க நகரத் தலைவர் யு.காதர் உசேன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.மாலதி, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், மாநகரச் செயலாளர் என்.குருசாமி, மாநகரக்குழு உறுப்பினர்கள் ஹெச்.அப்துல் நசீர், சி.ராஜன், எல்.துரை, எஸ்.மனோகரன், எம்.கோஸ்கனி மற்றும் வாலிபர் சங்க நகரத் தலைவர் ஹரிபிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கும்பகோணம்
கும்பகோணத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர செயலாளர் ரஞ்சித் தலைமை ஏற்றார் மாவட்ட பொருளாளர் ராமன் ஒன்றிய தலைவர் தமிழினியன் பொருளாளர் கார்த்தி, பகத், சுகுமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் சின்னை.பாண்டியன் நகர பொறுப்பாளர்கள் எம்கண்ணன் எஸ்.செல்வமணி பழ.அன்புமணி சிபிஎம் நகர செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட சிபிஎம் கட்சியினர் வாலிபர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன குரல் எழுப்பினர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை வாலிபர், மாணவர், மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் துரை.நாராயணன் தலைமை வகித்தார். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியா, மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுசீலா, செயலாளர் டி.சலோமி, பொருளாளர் பாண்டிசெல்வி உள்ளிட்டோர் படுகொலையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதே போன்று அறந்தாங்கி மற்றும் கந்தர்வக்கோட்டையில் வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய நகரக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருத்துறைப்பூண்டி அண்ணாசிலை அருகில் நடைபெற்றது. இறந்த தோழர் அசோக்கிற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு அதன்பிறகு கண்டன ஆர்ப்பாட்டம் துவக்கப்பட்டது. மாவட்ட செயற்குழு சி.ஜோதிபாசு, மாவட்டக்குழு எஸ.சாமிநாதன், நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன், ஒன்றிய செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ், கு.பாலசுப்பிரமணியன், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ஏ.கே.வேலவன், நகர செயலாளர் வழக்கறிஞர் சி.சிவசாகர், தலைவர் சி.வீரசேகரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வி.ரவி, டி.எஸ்.மணியன், ஆர்.வேதையன், ஆர்.மதியழகன், பி.என்.தங்கராசு, எஸ்.பவானி, என்.வீராச்சாமி, நகரக்குழு ஏ.கே.செல்வம், வழக்கறிஞர் வி.வி.செந்தில், வாலிபர் சங்க தோழர்ஆர்.ஜி.மணிகண்டன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி
வாலிபர் சங்க திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகில் நடைபெற்றது. இரட்ட மலை கிழக்கு பகுதி செயலாளர் இரட்டமலை தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் லெனின் மாவட்ட தலைவர் பிரகாஷ், பொருளாளர் சுரேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சீனிவாசன், கிச்சான், ஏழுமலை, ஷாஜகான், விக்கி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கரூர்
தோகைமலை பேருந்து நிலையம் முன்பு கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒன்றிய செயலாளர் கே.சக்திவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.இலக்குவன் கண்டன உரையாற்றினார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் முனியப்பன், சங்கப்பிள்ளை, ரமேஷ், தங்கராசு, பாலகிருஷ்ணன், வடிவேல், செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.