திருச்சிராப்பள்ளி: திருச்சி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இருந்து பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பிஎஸ்என்எல்இயு மற்றும் அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் பணி ஓய்வு பாராட்டு விழா திங்களன்று நடைபெற்றது. விழாவிற்கு பிஎஸ்என்எல்இயு துணைத்தலைவர் தேவராஜ், அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்க துணைத்தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில செயலாளர் குப்புசாமி. மாநில தலைவர் நரசிம்மன் பொருளாளர் நடராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பணி ஓய்வு பெற்ற 40 பேரும் அகில இந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்கத்தில் இணைந்தனர். முன்னதாக பிஎஸ்என்எல்இயு மாவட்ட செயலாளர் அஸ்லம்பாஷா வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஜான்பாஷா நன்றி கூறினார்.