திருச்சிராப்பள்ளி, ஜன.6- என்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்தம்? என்ன செய்ய இருக்கிறது தேசிய குடிமக்கள் பதி வேடு? என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம் மற்றும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார் பில் சிறப்பு கருத்தரங்கம் உறையூரில் உள்ள மருந்து மற்றும் விற்பனை பிரதி நிதிகள் சங்க அலுவல கத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. கருத்தரங்கிற்கு தமுஎகச மாநில துணைத்தலைவர் நந்தலாலா தலைமை வகித்தார். அறிஞர் எஸ்.வி.ராஜதுரை, த.மு.எ.க.ச மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்க மாநில பொதுச்செய லாளர் முத்து அமுதன் ஆகியோர் பேசினர். தேசிய குடிமக்கள் பதி வேட்டிற்கு தகவல்களை திரட்டும் விதமாக தேசிய மக்கள் தொகை கணக்கெடு ப்பு அமைந்துள்ளபடியால் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பினை தற்சம யம் எடுக்க வேண்டாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வலியுறுத் தும் வகையில் தமுஎகச சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. திருச்சியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை அறிஞர் எஸ்.வி.ராஜதுரை முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். முன்ன தாக த.மு.எ.க.ச மாவட்டச் செயலாளர் ரங்கராஜன் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் காளிராஜ் நன்றி கூறினார்.