tamilnadu

img

பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை

கரூர், ஏப்.19-கரூர் பரணி பார்க் பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளனர். எஸ்.ஹரி பிரசாத்- 592, பி.மோனிஷா- 590, ஜி.ரம்யா- 588, எஸ்.கிருத்திகா-584 ஆகியோர் பள்ளியில் முதல் நான்கு இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும் 570 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவர்களும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 22 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 80 மாணவர்களும் பெற்றுள்ளனர். பரணி பார்க் பள்ளியில் பொதுத்தேர்விற்கான பயிற்சியோடு சேர்த்து ஆந்திர ஆசிரியர்களைக் கொண்டு நீட்-ஜீ (சூநுநுகூ-துநுநு) சிறப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது. முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் எஸ்.ஹரி பிரசாத் இப்பயிற்சி வகுப்பில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


பள்ளியில் கணினி அறிவியலில் 9 மாணவர்களும், கணக்குப் பதிவியியலில் 5 மாணவர்களும், வணிகவியலில் 2 மாணவர்களும், பொருளியலில் 2 மாணவர்களும், வேதியியலில் ஒரு மாணவரும் என மொத்தம் 19 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் கடந்த ஜனவரி மாதம் ஜீ மெயின் (துநுநு ஆஹஐசூ) தேசிய நுழைவுத்தேர்வில் எஸ்.ஹரி பிரசாத், ஆர்.பி.கிருத்திகா, எம்.சந்தோஷ் குமார், எஸ்.பூஜனா ஆகியோர் குரோத் அகாடமி பயிற்சி வகுப்பின் மூலம் 90 சதவீதத்திற்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்துள்ள மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பரணிபார்க் கல்விக்குழுமத்தின் தாளாளர் எஸ்.மோகனரெங்கன் தலைமை தாங்கினார்.


செயலர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களையும், அவர்களின் சாதனைக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் பரணிபார்க் கல்விக்குழுமத்தின் முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்ரமணியன், நிர்வாக அலுவலர் எம்.சுரேஷ், பள்ளியின் முதல்வர் கே.சேகர், துணை முதல்வர்கள் எம்.முத்துக்குமரன், ஜீ.நவீன் குமார், குரோத் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் கவிதா ராமசுப்ரமணியன், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

;