tamilnadu

img

சென்னையில் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும்

ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை

சென்னை, மே 29 - சென்னையில் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வலியுறுத்தி ஜூன் 4 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் நடைபெறும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர். கொரானா தொற்று பரவலை தடுக்க 4 கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் சென்னையில் 68 நாட்களாக ஆட்டோக்கள் ஓடவில்லை. ஆட்டோ ஓட்டு நர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மாநில அரசு பல தொழில்களுக்கு நிபந்தனை யோடு அனுமதி அளித்துள்ளது, ஆனால்  ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க வில்லை.  இந்நிலையில் வெள்ளியன்று (மே 29)  சென்னையில் அனைத்து ஆட்டோ சங்க கூட்ட மைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடை பெற்றது. அப்போது பேசிய தலைவர்கள், ஊரடங்கு காலத்தில் ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க முடியவில்லை. எனவே, பேட்ஜ் பெற்றுள்ள ஓட்டுநர்களுக்கு கட்டணமின்றி ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்து தர வேண்டும்  என்று வலியுறுத்தினர்.

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு தலா 15 ஆயி ரம் ரூபாய் நிவாரணம் வழங்கவேண்டும், காப்பீடு இல்லையென்று இந்த ஆண்டு முழு வதும் சிறைபிடிப்பது, அபராதம் வசூலிப்பது போன்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும், ஆட்டோக்கான அனுமதி உரி மத்தினையும், சாலைவரியையும் செலுத்த ஓராண்டு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். 4ஆம் கட்ட ஊரடங்கு நிறைவடையும் நிலையில் இனியும் ஆட்டோ தொழிலாளர்கள்  முடக்கப்பட்டால் பிச்சை எடுக்கும் நிலைக்கு  தள்ளப்படுவார்கள். எனவே, கோரிக்கைளை வலியுறுத்தி ஜூன் 4ஆம் தேதி சென்னை மாவட்டஆட்சியரை சந்தித்து மனு அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த செய்தியாளர் சந்திப்பில் அனைத்து  ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு ஒருங்கி ணைப்பாளர் எஸ்.பாலசுப்பிரமணியம், ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஏ.எல்.மனோகரன், ஜெயகோபால்,  நடராஜன் (தொமுச), மு.சம்பத்(ஏஐடியுசி), அமெ ரிக்கை நாராயணன் (இனோடா), காசிராஜன்,  வேணுராம்(டிஎம்டிஎஸ்பி), சுரேஷ்குமார் (எல்எல்எப்), மகேந்திரகுமார்(எஸ்டிடியு), அழகேசன்(ஐஎன்டியூசி), பி.குப்பன் (ஏஏடியூ), சுரேஷ்(குட்வில்), பரமேஷ்வரன் (எச்எம்எஸ்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

;