tamilnadu

img

ஜூலை 10-ல் மாநிலம் தழுவிய அங்கன்வாடி ஊழியர் போராட்டம்

கரூர், ஜூலை 9- தமிழ்நாடு அங்கன்வாடி ஊழி யர் மற்றம் உதவியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் மாநில துணை தலைவர் பா.சித்ரச்செல்வி தலை மையில் கரூரில் நடைபெற்றது. சென்னை, விருதுநகர், திருப்பூர், திருச்சி, திருநெல்வெலி, மதுரை உள்ளிட்ட 26 மாவட்டங்களிலிருந்து மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  சங்க மாநில பொதுச்செயலாளர் டி.டெய்சி வேலையறிக்கையை முன்வைத்து பேசினார். சிஐடியு சங்க மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு, மாநில செயலாளர் கே.சி.கோபிக்குமார், கரூர் மாவட்ட தலைவர் ஜி.ஜீவானந்தம் ஆகியோர் பேசினர். மாநில பொரு ளாளர் எம்.பாக்கியம், மாநில நிர்வாகிகள் என்.சுசீலா, எஸ்.ரத்தின மாலா, எஸ்.தேவமணி, எஸ்.அந் தோணியம்மாள், எம்.சரோஜா உள் ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மத்திய அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியைக் கைவிட வேண்டும். எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை தமிழக அர சின் ஆணைப்படி நடத்திட வேண்டும், மத்திய பட்ஜெட்டில் அரசு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி  திட்டத்திற்கு உரிய நிதி வழங்க வேண்டும். தமிழக அரசு தொடர்ந்து அங்கன்வாடி ஊழி யர்களுக்கு பிறதுறைப் பணிகளைத் திணிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 10-ல் தமிழகம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட வட்டாரங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி வட்டார அலுவலகம் முன்பு கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

;