விவசாயிகளின் தொடர் கோரிக்கை
தரங்கம்பாடி, நவ.10- நாகை மாவட்டம், திருக்கடையூர் டி.மணல்மேடு, காழி யப்பநல்லூர், கிள்ளியூர் ஆகிய ஊராட்சிக்குட்பட்ட கிரா மங்கள் வழியாக செல்லக் கூடிய கடலாழி ஆறு, மகிமலை யாறு, மஞ்சளாறு, சேர்வாரியாறு, மூர்த்தி வாய்க்கால், வடக்கு வாய்கால் உள்ளிட்ட ஆறு, வாய்க்கால்கள் தூர்வா ரப்பட்டுள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் நீரில் மூழ்கி அழுகி வந்த சம்பா பயிர்கள் நடப்பாண்டில் எந்தவித தடையுமின்றி தண்ணீர் தேங்காமல் வடிந்ததால் சம்பா பயிர் அனைத்தும் தப்பித்துள்ளதால் அப்பகுதி விவ சாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவ மழை பொழியும் போதெல்லாம் நடவு பயிர் முழுவதும் நீரில் மூழ்கி அழுகி போவது வாடிக்கையாக இருந்த நிலையில் இவ்வாண்டு ஒவ்வொரு பாசன ஆறு, வாய்க்கால்கள் பொதுப்பணித் துறையால் தூர்வாரப்பட்டதால் சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் தப்பித்துள்ளதாகவும், விவசாயி களின் பல ஆண்டு கால கோரிக்கையை ஏற்று தூர்வாரும் பணிகளை செய்த பொதுப்பணித் துறையினர், உடனடியாக தூர்வாரப்படாத ஒரு சில உள் வாய்க்கால்களையும் தூர்வாரி உதவ வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்தவரும், ஓய்வு பெற்ற ஆசிரியருமான, விவ சாயி ஆறு.நராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.