திண்டுக்கல்,அக்டோபர்.22- நத்தம் அருகே கிராமத்திற்கு செல்லும் வழியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள எஸ் கொடை. கிராமம் கொம்புக்கார பாளையம் ஊருக்கு செல்லும் வழியில், கடுமையான மழை காரணமாக காற்றாற்று வெள்ளம் உருவாகியுள்ளது.
இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு வெளியூர் செல்பவர்கள் வெள்ளத்தை கடந்து செல்வதால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.