tamilnadu

img

வெங்காயமும்-தங்கமும்: பெண்கள் ஒப்பாரி போராட்டம்....

திண்டுக்கல்:
கடுமையாக உயர்ந்து வரும் வெங்காயவிலையை மத்திய-மாநில அரசுகள் கட்டுப் படுத்த வலியுறுத்தி  திண்டுக்கல்லில் மாதர்சங்கம் சார்பில் ஒப்பாரிப் போராட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. திண்டுக்கல் பேருந்துநிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் மாவட்டத்தலைவர் ஜானகி, நகர் தலைவர் திலகவதி, நகரச்செயலாளர் ராஜேஷ்வரி,பார்வதி, சகாயமேரி, கிறிஷ்டினாமேரி, யுவஸ்ரீ,தனலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.வெங்காயம் விலை தங்கம் விலையைப் போல உயர்ந்து வருகிறது என்பதை காட்டும் வகையில் நகைப் பெட்டியில் வெங்காயத்தை வைத்து ஒப்பாரி வைத்தனர்.