tamilnadu

img

ராணுவ தளவாட தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு சிஐடியு ஆதரவு

திண்டுக்கல்:
பொதுத்துறை நிறுவனமான 41 ராணுவ தளவாட தொழிற் சாலைகளை கார்ப்பரேசனாக மாற்றி, தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய பாஜக அரசின்  நடவடிக்கையைக் கண்டித்து அகில இந்திய அளவில் ராணுவதளவாட தொழிலாளர்கள் நடத்து கின்ற ஒரு மாத வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு சிஐடியு ஆதரவை தெரிவித்துள்ளது. 

திண்டுக்கல்லில் சிஐடியுமாநில நிர்வாகிகள் கூட்டம்மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செய லாளர் ஜி.சுகுமாறன், மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபுமற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மத்தியில் ஆளும் பாஜக அரசின் தனியார்மயக் கொள்கையின் காரணமாக நாட்டில் உள்ள41 ராணுவ தளவாட தொழிற்சாலைகளை தனியாருக்கு தாரைவார்க்க முயற்சிக்கப்படுகிறது. இது தொடர்பாக தொழிற்சங்கங்கள் மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்த தையடுத்து செவ்வாய்க்கிழமை முதல் நாட்டில் உள்ள 41 ராணுவ தளவாட தொழிற்சாலைகளிலும் ஒரு மாத கால வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த சிஐடியு, ஏஐடியுசி, ஐ.என்.டி.யுசி, எச்.எம்.எஸ் உள்ளிட்ட பல தொழிற் சங்கங்கள் அறைகூவல் விடுத்தன. அதன்படி, இந்ததொழிற்சாலைகளில் பணி யாற்றும்  ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள ஆவடி பீரங்கித் தொழிற்சாலை, அரவங்காடு வெடி ருந்துத் தொழிற்சாலை, திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஆகிய தொழிற்சாலைகளில் வேலைநிறுத்தம் துவங்கியுள்ளது. இந்த வேலைநிறுத் தத்திற்கு ஆதரவாக சிஐடியுசார்பாக ஆதரவு இயக்கம் நடத்துவது என்று முடிவு செய்யப் பட்டுள்ளது. வேலை நிறுத்தத்திற்கு சிஐடியு தனதுமுழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது.

பி.எஸ்.என்.எல் -ஐ நஷ்டமாக்காதே!
பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி அதனைசெயல் இழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் மத்திய அரசு  தொடர்ந்து ஈடுபடுவதை கைவிட வேண்டும்.சேலம் உருக்காலையை தனியாருக்கு கொடுக்கும் நட வடிக்கைக்கு எதிரான பந்த் போராட்டத்திற்கும் சிஐடியு ஆதரவை தெரிவித்தது.

மாநில மாநாடு
காஞ்சிபுரத்தில் சிஐடியு மாநில மாநாடு செப்டம்பர் 19 முதல் 22 வரை நடைபெறுகிறது. 22 ஆம் தேதி லட்சம் பேர் கலந்து கொள்கின்ற தொழிலாளர்களின் லட்சியப் பேரணி நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

;