ஊராட்சிகள், பேரூராட்சிகளை அருகிலுள்ள நகராட்சிகள், மாநகராட்சிகளுடன் இணைப்பது குறித்து பரிசீலனை செய்த பின்பு ஊராட்சி தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 1,256 பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணி ஆணைகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார். விழாவில் முடிவில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி
"ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சியுடன் சேர்க்க வேண்டியுள்ளது. ஊராட்சிகளை சேர்க்க பல மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பரிசீலனை செய்த பின்பு ஊராட்சி தேர்தல் நடத்தப்படும்" என தகவல் தெரிவித்துள்ளார்.