tamilnadu

அழகாபுரி குடகனாறு அணைக்கு  மழைநீர் வராததால் விவசாயிகள் கவலை

வேடசந்தூர், டிச.19- வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி குடகனாறு அணைக்கு மழை வெள்ளநீர் வந்தால் உடையும் நிலையில் ஷட்டர்கள் உள்ளதால் கிளை வாய்க்கால்களுக்கு மழைநீரை திரும்பி விட்டனர். அணைக்கு தண்ணீர்வராததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். குடகனாறு பழனி மலையின் கிழக்கு கோடி அடிவாரத்தில் தொடங்கிஆத்தூர், திண்டுக்கல் மற்றும் வேடசந்தூர் வழியே பயணித்து வேடசந்தூர்அருகே உள்ள அழகாபுரி குடகனாறு அணையில் நிரம்பி பின்பு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்தின் வழியாகதன்னுடைய 109 கிலோ மீட்டர் நீண்டபயணத்தை முடித்து, கரூர் மாவட்டம் மூலப்பட்டி அமராவதி ஆற்றில் கலக்கிறது.  மாங்கரையாறு, சந்தனவர்த்தினி ஆறு, வரட்டாறு மற்றும் மான்கோம்பையாறு ஆகிய சிற்றாறுகள் குடகனாற்று நீர்வரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.  இதில் வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயி களுக்காக அழகாபுரியில் 15 ஷட்டர்கள் கொண்டகுடகனாறு அணை கட்டப்பட்டுள்ளது. அணையால் திண்டுக்கல் மாவட்டத் தில் வேடசந்தூர் பகுதியில் 3663 ஏக்கர்விவசாய நிலமும், கரூர் மாவட்டத்தில்5337 ஏக்கர் விவசாய நிலங்க ளும் பயன்பெறுகிறது. மேலும் அணையைச் சுற்றியுள்ள விவசாய கிணறுகளின் நீர்மட்டமும் உயரும் கடந்த சில வருடங்களாக மழைபெய்யாத நிலையில் அணை முற்றி லும் வறண்ட நிலையிலேயே இருந் தது.  இந்நிலையில் இந்த ஆண்டு பருவமழை பெய்துள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பின. ஆனால் அழகாபுரி குடகனாறு அணைக்கு தண்ணீர் வரவில்லை. அணையின் உட்பகுதி யில் சிறிதளவு தண்ணீர் மட்டுமே தேங்கி நிற்கிறது. பழைய 4 ஷட்டர்கள் உறுதிதன்மை மீது சந்தேகம் ஏற்பட்டதால் ஆத்தூர் காமராஜர் அணைக்கு அருகேகுடகனாற்றில் மழைநீர் வராமல் தடுத்து அருகே உள்ள கிராமப்பகுதி வாய்கால்களில் திருப்பி விடப்பட்டது. இதனால் குடகனாற்றில் தண்ணீர் வரவில்லை.மாவட்ட முழுவதும் பெரும்பாலான அணைகள் நிரம்பிய நிலையில் குடகனாறு அணை நிரம்பாததால் வேடசந்தூர் பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

;