tamilnadu

img

திண்டுக்கல்லில் சிபிஎம் போராட்டம்

திண்டுக்கல், ஜூன் 4- கொரோனா கால நிவாரணம் ரூ.7,500 வழங்க வேண்டும். திண் டுக்கல் ஒன்றியப் பகுதிகளில் நில வும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண் டும். நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டு மென்பன் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனுக்கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலா ளர் தா.அஜாய்கோஷ் தலைமை வகித்தார். ஒன்றியக்கவுன்சிலர் செல்வநாயகம், சிபிஎம் ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் செல்வ கணேசன், பவுல்ராஜ், சரத் குமார், ஆவுளியப்பன், விவசாயி கள் சங்க ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், விவசாயத் தொழி லாளர் சங்க ஒன்றிய நிர்வாகிகள் பழனிச்சாமி, அம்மையப்பன், ராஜாமணி. செந்தில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பின்னர் வட் டார வளர்ச்சி அலுவலரிடம் கோரி க்கை மனு அளிக்கப்பட்டது.