tamilnadu

img

திமுக பெண் எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று

திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் திமுக எம்எல்ஏ இருப்பவர் சீத்தாபதி சொக்கலிங்கம், அவரது கணவர் இருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருப்பவர் சீத்தாபதி சொக்கலிங்கம் (65). இவரது கணவர் சொக்கலிங்கம் ஒலக்கூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளராக உள்ளார். கணவர்-மனைவி இருவருக்கும் கடந்த சில நாட்களாக இருமல், சளி உள்ளிட்ட பிரச்சனை இருந்தது.கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருந்ததால் இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.இந்த பரிசோதனை முடிவில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து இருவரும் மேல்மருவத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

;