tamilnadu

img

10 ஆண்டுகளுக்கு பிறகு நிறைந்தது மருதாநதி அணை பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை

திண்டுக்கல், நவ. 1- பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பருவ மழை யின் காரணமாக மருதாநதி அணை நிரம்பி யது. ஆயக்கட்டுதாரர்கள் பயன்பெறும் வகை யில் இருபுற வாய்க்கால்களிலும் பாச னத்திற்கு தண்ணீர் திறந்துவிட ஆட்சியர் முன்வரவேண்டுமென தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.  மருதாநதி அணைக்கு பண்ணைக்காடு பகுதியிலிருந்து வரும் பாம்பாறு, தாண்டிக்குடி ஆறு, குண்டலஆறு ஆகியவற்றிலிருந்து வரும் தண்ணீர் அணைக்கு வருகின்றன. அணை யையொட்டி பூலத்தூர் ஆறு ஓடுகிறது. இந்த அணையில் வெளியேற்றப்படும் தண்ணீர் தாமரைக்குளம், கருங்குளம்,  சொட்டாங்குளம், ரெங்கசமுத்திரம், வாடிப்பட்டி கண்மாய், கோம்பைப்பட்டி கண்மாய், சிறுவன்குளம், உள்ளிட்ட ஒன்பது குளங்கள் நிறைந்து உபரி நீர் நிலக்கோட்டை அருகேயுள்ள கூட்டாத்துப் பட்டியில் வைகை ஆற்றில் கலக்கிறது. இந்தக் குளங்களில் நிறைந்த நீரைக் கொண்டு அய்யம்பாளையம், அய்யங் கோட்டை, புதூர், சித்தரேவு, நெல்லூர், வாடிப்பட்டி, வெங்கடாஸ்திரிக் கோட்டை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கிட்டத்தட்ட ஆறாயிரம்  ஏக்கர் பாசன நிலங்கள் மூலம் பயன்பெறுகின்றன.  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலை வர்  பிச்சைமணி,  வடிவேல் ஆகியோர் கூறியதாவது: அணையில் 55 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் புதிய ஆயக்கட்டுதாரர்களுக்கு இருபுற வாய்க்காலிலு;ம் தண்ணீர் திறக்க வேண்டும். 55 அடிக்கு கீழ் இருந்தால் பழைய ஆயக்கட்டுதாரர்களுக்கு தண்ணீர் திறக்க லாம். தற்போது 70 அடி உள்ளதால் இரண்டு ஆயக்கட்டு தாரர்களுக்கும் தண்ணீர் திறக்க வேண்டும். தற்போது வெளியேற்றப்படும் உபரி நீர் நேராக கண்மாய்களுக்குச் செல்லும். இது பாசனத்திற்கு உதவாமல் வைகையில் கலக்கும் நிலையே உள்ளது. எனவே நேரடியாக பழைய மற்றும் புதிய  பாசன ஆயக்கட்டுதாரர்கள் பயன்பெறும் வகை யில் இரு புற வாய்க்களிலும்  தண்ணீர் திறந்து விட ஆட்சியர் முன்வர வேண்டும்  என்றனர். இந்த நிலையில் நவம்பர் 9-ஆம்தேதி அணையிலிருந்து  பாசனத்திற்காக தண்ணீர் முறைப்படி திறக்கப்பட உள்ளது. என் ஆட்சி யர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

;