திருத்துறைப்பூண்டி, ஜூலை 19 - முத்துப்பேட்டை ஒன்றியம் உதயமார்த்தாண்டபுரத்தில் நீண்ட காலமாக மணல் கொள்ளை நடைபெற்று கொண்டிரு க்கிறது என்று சமூக வலைதளங்களில் வழக்கறிஞர் சக்தி வேல் பதிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளாவின் கணவர் மகேந்திரன் மற்றும் அவரது தம்பி ஆகியோர் சக்திவேலை வழிமறித்து தாக்கியுள்ளனர். இதில், வழக்கறிஞரின் மண்டை மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. முத்துப்பேட்டை காவல்து றையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மணல் கொள்ளையைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் பல்வேறு இயக்கங்கள் நடைபெற்றிருப்பது குறிப்பிட த்தக்கது. அரசு அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவ டிக்கையும் எடுக்காததால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்கி றது. உடனடியாக அதிகாரிகள் தலையிட்டு மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.