tamilnadu

தாராபுரம்: சுகாதார பணிகளை மேற்கொள்ள கூடுதல் பணியாளர்களை நியமிக்கவேண்டும் சிபிஎம் கோரிக்கை மனு

தாராபுரம், ஜன. 11 - தாராபுரம் நகராட்சியில் சுகாதா ரப் பணிகளை மேற்கொள்ள கூடுதல் பணியாளர்களை நியமிக்கவேண்டும் என சிபிஎம் கோரிக்கை விடுத்துள் ளது. இதுதொடர்பாக  மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ் தாராபுரம் நகராட்சி ஆணையாளர் சங்கரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, ஆணையாளர் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுக்கப்பட்ட பத்திரிக்கை செய்திக் குறிப்பில், வீடுகளில் உள்ள குப்பை களைத் தரம் பிரித்து வைத்து நஞ்சியம்பாளையத்தில் உள்ள குப்பை சேகரிப்பு மையம் சென்று வழங்கவேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது. இது எதார்த்தத்துக்கு நேர் மாறானது. அவரவர் கொண்டு சேர்ப்பது சரியல்ல என்பதுடன் அந்த முடிவைக் கைவிடவேண்டும்.  மேலும், குப்பை சேகரிப்பு மையத் தில் சுகாதாரப் பணியாளர்கள் குப்பை களைப் பிரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. ஆனால் சாக் கடை அள்ளுவது, பொது இடம் சுத்தப்படுத்துவது அறவே இல்லை. நகரின் பல இடங்களில் குப்பைத் தொட்டி இல்லாததால் சாலை ஓரங்களில் மலைபோல் குப்பை குவிந்துள்ளது. சுகாதார ஆய்வாளர் கள், நகர்நல அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் சுகாதாரம் குறித்து மேற்பார்வை செய்வது இல்லை. மேஸ்திரிகளே எல்லாப் பணிகளை யும் மேற்கொள்வது வேதனைக் குரியதாகும். எனவே சாக்கடை அள்ள, பொது இடம் சுத்தப்படுத்த கூடுதல் பணியாளர்களை நிய மனம் செய்யவேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;