tamilnadu

img

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

தருமபுரி, ஜூலை 13- பாலக்கோடு அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். தருமபுரி மாவட்டம், பாலக் கோடு வட்டம், எருமாம்பட்டி கிரா மத்தில் 100க்கும் மேற்பட்ட வீடு கள் உள்ளன. இக்கிராமத்துக்கு சிலநாட்களாக குடிநீர் வரவில்லை. ஊராட்சியின் மூலம் வழங்கப்படும் தண்ணீரும் கிடைக்கவில்லை. இதனால் இக்கிராம மக்கள் அரு கில் உள்ள கிராமங்களுக்கு சென்று குடிநீர் எடுத்து வந்தனர். குடிநீருக் காக அருகில் உள்ள கிராமங்க ளுக்கு சென்று வருவதால்  பள்ளிக்கு செல்லும் மாணவர் கள் குறித்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லமுடிய வில்லை. மேலும், குடிநீர் கேட்டு இக் கிராம மக்கள் ஊராட்சி நிர்வா கத்திடமும், அதிகாரிகளிடமும் பலமுறை முறையிட்டுள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஆவேசமடைந்த அப்பகுதி பெண் கள் காலிக்குடங்களுடன் எரு மாம்பட்டி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கோடு காவல்துறையினர், வட்டாரவளர்ச்சி அலுவலர் கவுரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி கள் உறுதியளித்ததின் அடிப் படையில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.