tamilnadu

மக்களை பாதிக்கும் அவசர சட்டங்களை திரும்பப் பெறுக இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, செப். 19- மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மக்களை பாதிக்கும் அவசர சட்டங் களை திரும்பப்பெற வலியுறுத்தி தமி ழகம் முழுவதும் இடதுசாரி கட்சியினர் சனியன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் வழங்கிட வேண்டும். தேசிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப் பீட்டு அறிவிக்கை, மின்சாரத் திருத்த சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவ சர சட்டம் போன்ற சட்டங்களை திரும் பப் பெற வேண்டும். கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை நாட்களை 200 நாட்களாக அதி கரித்து, பேரூராட்சி பகுதிகளிலும் விரி வுபடுத்த வேண்டும். ரயில்வே, நிலக் கரி சுரங்கம், எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனி யாருக்கு தாரைவார்ப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சனியன்று இடதுசாரி கட்சியினர் தமி ழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

இதன் ஒருபகுதியாக தருமபுரி மாவட்டத்தில் தொலைபேசி நிலை யம், நல்லம்பள்ளி,  அரூர், பாப்பிரெட்டி பட்டி, மொரப்பூர், பாலக்கோடு, காரி மங்கலம், இண்டூர் ஆகிய பகுதிக ளில் இடதுசாரி கட்சியினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட் டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் எஸ்.தேவ ராசன், துணைச் செயலாளர் க.சி. தமிழ்குமரன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலா ளர் ஏ.குமார், மார்க்சிஸ்ட் லெனி னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் கோவிந்தராஜ் மற்றும் இடதுசாரி கட்சிகளின்  மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு, இடைக்குழு உறுப்பி னர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.

 சேலம்

சேலம் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம், ஓமலூர், எடப்பாடி, வாழப்பாடி, சங்ககிரி, ஆத்தூர், பெத்த நாயக்கன்பாளையம், கொண்ட லாம்பட்டி, கெங்கவல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் சிபிஐ மாவட்ட செயலாளர் மோகன், மாநிலக்குழு உறுப்பினர் பரமசிவம், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ராம மூர்த்தி மற்றும் சிபிஐ (எம்எல்) மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவை

கோவை மாவட்டத்தில் கோவை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, சிங்கை, பீளமேடு, பொள்ளாச்சி, ஆனைமலை, மதுக்கரை, பேரூர், எஸ்.எஸ்.குளம், பெரியநாயக்கன்பா ளையம், சூலூர், மேட்டுப்பாளைம், அன்னூர், தொண்டாமுத்தூர் உள் ளிட்ட பல்வேறு இடங்களில் நடை பெற்ற ஆர்ப்பாட்டங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொரு ளாளர் எம்.ஆறுமுகம்,  மாவட்ட செய லாளர் வி.எஸ்.சுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் சி.பத்மநாபன், ஏ. ராதிகா மற்றும் கட்சிகளின்  மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு, இடைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 உதகை

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கோத்தகிரி,கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பல்வேறு இடங் களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.ஏ. பாஸ்கரன், சிபிஐ மாவட்டச் செயலா ளர்  போஜராஜ் மற்றும் இரு கட்சிக ளின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், இடைக்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் திருச் செங்கோடு, ராசிபுரம், பள்ளிபாளை யம், பெரியமணலி, வையப்பமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், சிபிஐ மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் மணிவேல், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள், இடைக்குழு உறுப்பினர் கள், ஒன்றிய செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்

திருப்பூரில் மாநகராட்சி அலுவல கம் எதிரில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.ரவி, மார்க் சிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரச் செய லாளர் டி.ஜெயபால் ஆகியோர் கோரிக்கை விளக்க உரையாற்றினர். இதேபோல், பொங்கலூர், அவிநாசி, உடுமலை, தாராபுரம், ஊத்துக்குளி, மடத்துக்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட் டங்கள் நடைபெற்றன. இதில் இரு கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள், முன்னணி ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு  நகரம், ஈரோடு தாலுகா, அந்தியூர், சத்தியமங்கலம், கோபிசெட்டிப்பா ளையம், கொடுமுடி, மொடக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடை பெற்ற ஆர்ப்பாட்டங்களில் சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் வி.பி.குண சேகரன், சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ஆர்.ரகுராமன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர் கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.

;