tamilnadu

img

தலைவர்களின் செயல்பாடுகளுக்கு மதிப்பெண் வழங்கும் மருத்துவர் இராமதாஸ் அன்புமணியின் செயல்பாட்டுக்கு மதிப்பெண் வழங்காதது ஏன்?

தருமபுரி, ஏப்.16-அரசியல் கட்சி தலைவர்களின் செயல்பாடுகளுக்கு மதிப்பெண் வழங்கும் மருத்துவர் இராமதாஸ், அன்புமணியின் செயல்பாட்டுக்கு மதிப்பெண் வழங்காதது ஏன் என்று தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளர்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் செவ்வாயன்று தருமபுரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், சென்னை உயர்நீதிமன்றம் சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை குறித்து விவசாயிகளுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. நியாயம் கேட்டு வழக்கு தொடுத்தது பாப்பிரெட்டிபட்டி விவசாயிகள். ஆனால், பாமக அன்புமணி தன்பெயரில் வழக்கு தொடர்ந்ததாக சொல்கிறார்.பாஜக- அதிமுக கூட்டணி சார்பில் சேலத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் தமிழக முதல்வர்எடப்பாடி பழனிசாமி, பாமக நிர்வானர் இராமதாஸ் முன்னிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எட்டு வழிச்சாலையை அமைத்தே தீருவோம் என்று சொல்கிறார். இந்த முரண்பட்ட நிலைக்கு அன்புமணி என்ன சொல்ல போகிறார் என கேள்வி எழுப்பினார்.மேலும், நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுக-பாஜகவின் நிலைபடு முரண்பாடக உள்ளது.


கூட்டணியில் உள்ள பாமக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சொல்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட்தேர்வை கொண்டு வந்ததாக அன்புமணி சொல்கிறார். தமிழகத்தில் மருத்துவ கல்வி மேம்பாட்டுள்ளதால் காங்கிரஸ் ஆட்சியில் நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டது.நீட்தேர்வை தமிழகத்தில் ரத்துசெய்ய முடியாது என சொல்லும் பாஜகயின் நிலைபாட்டுக்கு அன்புமணியின் பதில் என்ன. பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் மக்களுக்கான திட்டம் நிறைவேற்றுவது குறித்தும், நிழல் பட்ஜெட்டும், நீர்மேலாண்மை நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை வழங்குவார். அன்புமணி 5 ஆண்டு காலத்தில் எந்த நீர்மேலாண்மை திட்டத்தை அமல்படுத்தவில்லை. கடைசியில் கையெழுத்து இயக்கம் நடத்தியது ஏன் என்றார்.திண்டிவனத்தில் வாக்குரிமையுடன், சென்னையில் குடியிருக்கும் அன்புமணி தருமபுரியில் போட்டியிடுவது ஏன் ?.எந்த தலித் சமூகத்தை எதிர்த்துஅரசியல் நடத்தினாரோ அந்த தலித் சமூகத்தை சேர்ந்த வேட்பாளருக்குத்தான் திண்டிவனத்தில் வாக்களிக்க முடியும்.


இதுதான் இந்திய ஜனநாயகம்என குறிப்பிட்டார்.ஒருவேலை நீங்கள் தருமபுரியில் வெற்றிபெற்றால் உங்களை பார்க்க மக்கள் திண்டிவனம் வரவேண்டுமா? நீங்கள் குடியிருக்கும் சென்னை வீட்டிற்குவரவேண்டுமா? நீங்கள் எப்படி தருமபுரி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியும். தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சென்ற சராசரி வருகைபதிவேடு 453, ஆனால், அன்புமணியின் வருகை பதிவுகுறைவு 12 முறைதான் விவாதத்தில் பங்கேற்றுள்ளார். இப்படி பங்கேற்ற உங்களால் எப்படி தருமபுரி மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியும்.பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அவர்களின் செயல்பாடுகளுக்கும் மதிப்பெண் வழங்குவார்.கடந்த 5 வருடங்களாக தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மருத்துவர் அன்புமணி செயல்பாட்டுக்கு இராமதாஸ் மதிப்பெண் வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

;