தருமபுரி நகரில் தீக்கதிர் நாளிதழின் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. இதில், சிபிஎம் மாநில செயற் குழு உறுப்பினர் கே.தங்கவேல் கலந்து கொண்டு 49 ஆண்டு சந்தாக்களுக்கான தொகையை பெற்றுக் கொண்டார். உடன் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கிரைஸாமேரி, நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு, எம்.கார்த்திகே யன், எஸ்.மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.