tamilnadu

img

பள்ளி பரிமாற்ற நிகழ்ச்சி

தருமபுரி, ஜன. 29- தருமபுரி மாவட்டத்தில் 226 அரசு பள்ளிகளில் பள்ளி பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு ஒருங்கி ணைந்தபள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் பள்ளி  பரிமாற்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டத்தின் கீழ் கிராமப்புற பள்ளிகளும் நகர்ப்புற பள்ளிகளில் இணைக்கப்பட்டு இணைப்பு பள்ளி களில் பயிலும் மாணவர்கள் இரு பள்ளிகளிலும் உள்ள வசதிகள் மற்றும் கற்றல், கற்பித்தல் நிகழ்வு களை பகிர்ந்து கொள்ளுதல் பள்ளிகளை சுற்றி உள்ள தொழிற்சாலைகள், இயற்கை வளங்கள் ஆகிய வற்றை பார்த்து புதிய அனுபவம் பெறுகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் சின்னபள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி  எட்டாம் வகுப்பு மாணவர்கள், பென்னாகரம் அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு பள்ளி ஆய் வகம், பள்ளி நூலகம், உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் ஆகியவற்றை பயன்படுத்தி கற்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்பட்டது .மேலும் பென்னாகரம் வாரச்சந்தை, அஞ்சல் அலுவலகம் ஆகி யவற்றை பார்வையிட்டு அஞ்சல் அலுவலக செயல் பாட்டினை தெரிந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி கள் நடந்தது.  முன்னதாக, இந்த நிகழ்ச்சிக்கு  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணி தலைமை வகித்தார்.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பழனி, தமிழாசிரியர் வெங் கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி பரி மாற்ற திட்டத்தினை உதவி திட்ட அலுவலர் தங்க வேல் ஆய்வு செய்தார். ஆய்வின்போது வேளாண் ஆசிரியர் கிருஷ்ணன் மாணவர்களுக்கு அடர் நடவு குறித்து மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். இதில் ஆசிரியர்கள் பெருமாள் , பழனிச் செல்வி, வளர்மதி ,  லில்லி ,வீரன், ஓவிய ஆசிரியர் சிகாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.