தருமபுரி, ஆக. 6 தருமபுரி மாவட்டம், கும் பலப்பாடி கிராமத்தில் உள்ள ஏரி மற்றும் நீர்வரத்து கால்வாயின் ஒருபகுதி நீண்ட காலமாக தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால் நீர்வரத்தும், ஏரி யின் நீர்மட்டம் குறைந்து விவசாயிகள் பாதிக்கப் பட்டு வருகின்றனர். தற் போது சாமன் ஏரியில் குடி மராமத்துப் பணி நடை பெற்று வருகிறது. எனவே, இப்பணி நடைபெறும் போதே ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர்வரத்து கால் வாய் ஆக்கிரமிப்பை அகற்றி குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.