tamilnadu

img

ஒகேனக்கல்லில் தண்ணீர் வருகை அதிகரிப்பு கரையோர மக்கள் வெளியேற்றம்

பென்னாகரம், ஆக.12- ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் 3  லட்சம் கன அடி தண்ணீர் வருவ தால், திங்களன்று கரையோரப் பகுதியில் உள்ள மக்களை மாவட்ட நிர்வாகம் வெளியேற்றி உள்ளது. கர்நாடக பகுதியில் தொடர் கன  மழை காரணமாக அணைகள் முழு  கொள்ளளவை எட்டி நிரம்பி  வருகிறது. இதனால் தொடர்ந்து  தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒகேனக்கல் நீர்  வீழ்ச்சிக்கு சுமார் 3 லட்சம் கன  அடி அளவு நீர் வந்து கொண்டு இருக்கின்றது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல்  இயக்கவும், குளிக்கவும் சுற்றுலா  பயணிகளுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் ஒகேனக்கல் கரையோரப் பகுதியில் உள்ள குடியிருந்த பொதுமக்களை வெளியேறியுள்ளனர். 3 லட்சம் கன  அடி தண்ணீர் வருவதால் ஒகேனக் கல்லில் உள்ள தொங்கு பாலத்தை தொட்டவாறு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.  மேலும் ஒகேனக்கல்லிலிருந்து அணுசக்தி நாற்றபாளையம்  வழியாக கர்நாடகத்திற்கு செல்லும்  சாலை தற்போது மூடப்பட்டுள்ளது. நாடார் கொட்டாய் என்ற பகுதியில் சாலையில் பெருமளவு தண்ணீர் ஓடு வதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. அதனால் தற்காலிக மாக அந்தச் சாலை மூடப்பட்டுள் ளது. மேலும் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகமாக உள்ளதால் ஒகேனக்கல் சாலையில் உள்ள  சோதனைச் சாவடியில் வாகனங் களை நிறுத்தி திருப்பி அனுப்பும் பணியில் காவல்துறையினர் ஈடு பட்டு வருகின்றனர். மேலும் ஒகே னக்கல் பகுதி முழுவதும் காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறை யினர் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.  மேலும் ஒகேனக்கல் நீர்வரத்து  அதிகமான காரணத்தால் 42  குடும்பங்கள் பாதிப்புக்கு உள்ளாகி யுள்ளது. இவர்களை ஒகேனக்கல் அரசு துவக்கப் பள்ளி மற்றும் ஊட்ட மலை மேல்நிலைப்பள்ளி நிவாரண  முகாம்களில் தங்க வைக்கப்பட் டுள்ளனர்   என அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். மேலும் சின்னப்ப நல்லூர் அரசு பள்ளியிலும் செவ் வாய்க்கிழமை முதல் முகாம் செயல் படும் எனவும் 200 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இந்த முகாமில் உள்ளது  எனவும் அதிகாரிகள் தெரிவித் தனர்.

;