tamilnadu

img

இலக்கியம்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிடுக - மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஆக. 29- இலக்கியம்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை நிறை வேற்றக்கோரி வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. தருமபுரி மாவட்டம், இலக்கி யம்பட்டி ஊராட்சி உள்ள தமிழ் நாடு வீட்டுவசதி வாரிய குடியி ருப்பு பகுதியில் எரிவாயு தகன மேடை (சுடுகாடு) அமைத்து தர வேண்டும். குண்டும், குழியுமாக உள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும். ஒகேனக்கல் குடிநீர் மற்றும் ஊராட்சி நிர்வாகம் வழங்கும் குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். வெண்ணாம் பட்டி ரயில்வே கேட்டில் மேம்பா லம் அமைக்கும் பணியை துவங்க வேண்டும். இலக்கியம்பட்டி ஊராட்சியை பிடமனேரி, வெண்ணாம்பட்டி, இலக்கியம் பட்டி என 3 ஊராட்சிகளாக உருவாக்கப்பட வேண்டும். இலக் கியம்பட்டி ஏரி, வி.ஜெட்டிஅள்ளி ஏரி, பிடமனேரி, குள்ளனூர்ஏரி ஆகியவற்றை தூர்வார வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்டக் குழு உறுப் பினர் கே.பூபதி தலைமை வகித் தார். மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.எஸ்.ராமச் சந்திரன்,  ஆர்.சிசுபாலன், ஒன்றி யச் செயலாளர் என்.கந்தசாமி, நகரச் செயலாளர் ஆர்.ஜோதி பாசு, நல்லம்பள்ளி ஒன்றியச் செயலாளர் கே.குப்புசாமி மற்றும் எம்.பெருமாள், நாகைபாலு, தீ.மாரியப்பன், எம்.மீனாட்சி, கே.சுசிலா மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.