தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் விளைநிலங்களில் பெட்ரோலியக் குழாய் பதிப்ப தற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அடுத்த கட்ட போராட்டம் நடத்துவதற் கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பின ரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான பி.டில்லிபாபு, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.மல்லையன், மாவட்டச் செயலாளர் சோலை அர்ஜு னன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், அப்பகுதி விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.