மகாத்மா காந்தி பிறந்த அக் டோபர் 2 ஆம் தேதி 1965ஆம் ஆண்டு தருமபுரி புதிய மாவட்டமாக உதயமானது. இம்மாவட்டமானது 7 வருவாய் வட்டங் கள், 8 ஊராட்சி ஒன்றியங்கள், 10 பேரூ ராட்சிகளுடன் இயங்குகிறது. 17 லட்சம் மக்கள் தொகையை கொண்ட மாவட்டத் தில் 70 சதவிகிதத்தினர் சிறு,குறு விவ சாயிகள் ஆவர். மாவட்டத்தில் விவ சாயத்தை தவிர வேறு தொழில் வளம் ஏதுமில்லை. வேலைவாய்ப்பு, சுகாதாரம், மனித வாழ்நாள் உள்ளிட்டவற்றில் இம் மாவட்டம் மிகவும் பின்தங்கி உள்ளதாக மனிதவள மேம்பாட்டு அறிக்கை கூறுகி றது. மாவட்டம் பிரிந்தால் முன்னேற்ற கரமான வளர்ச்சி அடையும் என ஆட்சியா ளர்களால் முன்வைக்கப்பட்ட வாக்குறு திகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மத்திய, மாநில ஆட்சியாளர்களால் தொடர்ந்து இம்மாவட்டம் புறக்கணித்து வருவதே இதற்கு பிரதான காரணமாகும்.
பொய்த்துப்போன மழை
தருமபுரி மாவட்டத்தின் சராசரி மழை யளவு 853 மி.மீ ஆகும். ஆனால் இது கடந்த பத்து ஆண்டுகளாக சராசரியை கூட எட்ட முடியாத நிலைமை உள்ளது. இதனால் கடும் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பொய்த்து வானம் பார்த்த பூமியாக மாறி வருகிறது. குறிப்பாக சென்ற ஆண்டு 3ல் 1 பாகம் அளவுக்கே மழை பெய்தது. தென் மேற்கு பருவமழையில் ஒருபகுதியும், வடகிழக்கு பருவமழையில் கூடுதலாகவும் மழை பெய்யும். இந்தாண்டு இரு பருவ மழையுமே போதிய அளவிற்கு பெய்ய வில்லை. இந்தாண்டு தென்மேற்குப் பருவ மழை சற்று கூடுதலாக பெய்துள்ளது. இந்த மழைநீரை சேகரிக்க போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லை. மாவட்டத் தில் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வா ரும் பணிகள் பரவலாக நடைபெற்று வரு கிறது. இப்பணிகள் பாசனதாரர்கள் சங் கங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அரசு அறிவித்து பணிகள் நடைபெற்று வந்தா லும், வழக்கம்போல் ஆளும் கட்சியினர் தான் பாசன விவசாயிகள் பேரில் இப்பணி களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குளம், குட்டை, ஏரி களை தூர்வாரும் பணிகள் காலம் தாழ்ந்து நடைபெற்றாலும், நீர்நிலைகளுக்கு நீரைக் கொண்டு சேர்க்கும் வாய்க்கால் களைத் தூர்வாரும் பணிகள் தொடங்கப் படவே இல்லை. ஆண்டு சராசரி மழை யளவு தொடர்ந்து குறைந்து வருவதாலும், மழைநீர் சேமிக்க வசதி இல்லாததாலும் மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் 1000 அடிக்கும் கீழே சென்றுவிட்டது. கோடைக் காலங்களில் குடிநீருக்காக மக்கள் பெரி தும் சிரமப்பட வேண்டி உள்ளது. ஒகேனக் கல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் 70 சதவி கித குடியிருப்புகளுக்கே குடிநீர் விநியோ கிக்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீரும் தினந்தோறும் கிடைப்பதில்லை. மேலும் மாவட்டத்தில் விவசாயம், குடிநீருக்காக ஆழ்துளை கிணறு அமைக்க கருப்பு, பழுப்பு பகுதிகளாக அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலை நீடித்தால் இருக்கின்ற வாய்ப்பை பயன்படுத்த வில்லை என்றால் குடிநீர் கானல் நீராகி பாலைவனமாகிவிடும் என்பதை கவனத் தில் கொள்ள வேண்டும்.
வீணாகும் உபரி நீர்
அதேநேரம், இந்தாண்டு கர்நாடகா வில் கூடுதலாகப் பெய்த மழையின் கார ணமாக காவிரியில் மூன்று முறை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேட்டூர் உள் ளிட்ட அணைகள் நிரம்பி உபரியாக கட லில் கலந்த நீர் 20 டி.எம்.சிக்கு மேல் இருக்கும். தருமபுரி மாவட்டத்தை வறட்சி யிலிருந்து மீட்கவும், விவசாயத்தை பாது காக்க வேண்டும் எனில் மாற்று ஒரே தீர்வு மழை நீரை சேமிக்க வேண்டும். இதில் காவிரி, தென்பெண்ணை ஆறுகளில் உபரி யாக ஓடும் நீரை மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 600 ஏரிகள் மற்றும் 10 அணைக்கட்டுகளில் நிரப்புவதன் மூலமே மாவட்டத்தின் முகத்தோற்றத்தை மாற்றி அமைக்க முடியும். இந்த நீரை எடுப்பதால் எந்த பாதிப்பும் வராது. குறிப்பாக ஆண்டுக்கு 3 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே தேவையிருக்கும். உபரி நீரிலிருந்து ஏரி களுக்கு நீர் கொடுத்தால் மாவட்டத்தின் நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாயத்தை முதன்மையாகக் கொண்டுள்ள இம் மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் செழிக் கும். உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட் டத்தை செயல்படுத்த வலியுறுத்தி கடந்த 2018ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆயிரம் கி.மீ நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இப்போராட்டத்திற்கு பிறகு தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் ரூ.338 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு முதல்வரிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு முதல் பணிகள் துவக்கப்படும் எனவும் தருமபுரியில் தெரிவித்தார். ஆனால் இதுநாள் வரை அதற்கான நிதி ஒதுக்கப்பட வில்லை. அதேபோல், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது கே.ஆர்.பி. அணையின் வலதுபுற கால் வாயை மொரப்பூர் வரை நீட்டித்து அப்பகுதி யில் உள்ள ஏரிகளுக்கு நீர் நிரப்பப்படும் என வாக்குறுதி அளித்தார். 2011 ஆம் ஆண்டிலி ருந்து தற்போது வரை அதிமுக-வே ஆட்சியில் உள்ளது. ஆனால் இவ்வாக்குறு திகளை நிறைவேற்ற எந்த நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தருமபுரியில் நடை பெற்ற போது தற்போதைய முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி செனாக்கல் பாசன திட்டம் உள்ளிட்ட ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதாக வாக்குறுதி அளித்தார். அதற்கான பணி களும் இதுவரை துவக்கப்படவில்லை.
நீர்மின் திட்டம்
ஒகேனக்கல்லில் வரும் தண்ணீரை பயன்படுத்தி நீர்மின் நிலையம் அமைக்க வேண்டும் என்பது இம்மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். மாநிலத் தின் மின் தேவையில் பெரும் பகுதியை பூர்த்தி செய்ய இயலும். மனித உயிருக்கும், சுற்றுச்சூழலுக்கும் மாபெரும் கேடு விளை விக்கும் அணுமின் நிலையங்களை விரி வுபடுத்துவதற்கு மாறாக, இயற்கையாக ஓடும் நீரைக்கொண்டு செயல்படும் நீர்மின் திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக அமை யும்.
வேளாண் நிலங்கள்-விவசாயத்திற்கே
தருமபுரி மாவட்டத்தில் 74 சதவிகிதம் பேர் விவசாயத்தை சார்ந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரால் வேளாண் நிலங்களைக் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. சேலத்திலி ருந்து சென்னைக்கு செல்ல ஏற்கனவே மூன்று பிரதான சாலைகள் இருந்தும், 8 வழிச்சாலையை நீதிமன்றம் தற்காலிக தடை விதித்த பிறகும் அமைத்தே தீருவோம் என மாநில முதலமைச்சரே தொடர்ந்து பேசி வருகிறார். இதில் லட்சக்கணக்கான மரங்கள், நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள், சுற்றுச்சூழல் என எதைப்பற்றி யும் கணக்கில் கொள்ளவில்லை. ஏற்கனவே உள்ள சாலைகள் மிக கவலைக்கிடமாக உள்ளது. குறிப்பாக அயோத்தியாபட்ட ணம் முதல் வாணியம்பாடி வரை உள்ள சாலை மரண சாலையாக உள்ளது. மேலும், தருமபுரி - பாலக்கோடு, ஒசூர் ஆறுவழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்தப்படு கிறது. அதேபோல் இருகூர் முதல் தேவனகுந்தி வரையில் 300 கி.மீ எரிவாயுகுழாய், பெட்ரோலிய குழாய் (கெயில்) மற்றும் சிவா டியில் பெட்ரோலிய கிடங்கு அமைப்ப தற்கு எவ்வித அறிவிப்புமின்றி விவசாய நிலங்களில் அளவீடு செய்யப்படுகிறது. உயர்அழுத்த மின் கோபுரங்கள் உள்ளிட் டவற்றின் பெயரால் சிறு, குறு விவசாயி களிடமிருந்து நிலங்களை பறித்து அவர்க ளின் வாழ்வாதாரத்தைச் சீரழிக்கும் செய லில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள் ளன. இத்திட்டங்கள் அனைத்திற்கும் மாற்று ஏற்பாடு இருந்தும் அவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு விவசாயிகளி டமிருந்து நிலத்தை பறிப்பதோடு அவர் கள் அத்துக்கூலிகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதற்காக 1885ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட தந்திச் சட்டத்தின் மூலம் நிலம் கையகப் படுத்தப்படுவதாக கூறும் காரணங்கள் ஏற்கத்தக்கதல்ல.
வேலைவாய்ப்பு
தருமபுரி மாவட்டம் அமைக்கப்பட்டு 54 ஆண்டுகள் கடந்த பிறகும் அரூர், பாலக் கோடு ஆகிய பகுதியில் சர்க்கரை ஆலை களை தவிர 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பெரிய தொழிற்சாலை ஒன்று கூட இல்லை. இதனால் வேலைதேடி வெளி மாநிலம், மாவட்டங்களுக்கு குடிபெயரும் நிலையே தொடருகிறது. நல்லம்பள்ளி அருகே சிப்காட் தொடங்கப்படும் என அறிவித்து நிலமும் கையகப்படுத்தப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் சிப்காட் அமைக்கப்படவில்லை. அதேபோல் அரூர், பென்னாகரம் பகுதி களில் சிட்கோ தொழிற்சாலைகள் அமைக்க இடம் தேர்வு செய்து தொழிற்பேட்டை என தகவல் பலகை மட்டும் தொங்கிக் கொண்டி ருக்கிறது. இதுவரை பணிகள் தொடக்க நிலையிலேயே உள்ளன. தருமபுரி - மொரப்பூர் ரயில்வே இணைப்பு சாலை திட்டம் அறிவித்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் இப்பணிகள் துவக்கப்படவில்லை. இப்பணிகளை துரிதப்படுத்தி குறிப்பிட்ட கால வரைய றைக்குள் மேற்கண்ட தொழிற்சாலைகள் துவங்கி மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கிட வேண்டும்.
மக்கள் கோரிக்கை மாநாடு
எனவே, பெரும் எதிர்பார்ப்புகளோடு உதயமான தருமபுரி மாவட்டம் பொன் விழா கண்ட பின்பும் எந்த வளர்ச்சியையும் எட்டவில்லை. வறட்சியின் பிடியிலிருந்து மாவட்டத்தை மீட்டெடுக்க, பின்தங்கிய நிலையைப் போக்கி வளர்ச்சி கண்டிட வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரால் பன்னாட்டு நிறுவனங்கள் நலனுக்காக நிலப்பறிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்திட வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் கோரிக்கை மாநாடு இன்று (அக்.10) தருமபுரியில் நடைபெறுகிறது. இம்மாநாடு வெற்றிபெற மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களும் சாதி, மதம், அரசியல் வேறுபாடுகளை கடந்து ஒன்றுபட்டு போராட முன் வர வேண்டும்.
ஏ.குமார் (தருமபுரி மாவட்டச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.)