பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தல் ஒத்திவைப்பு
தருமபுரி, டிச. 25- தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான தேர்தலை ஒத்திவைப்பதாக மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக நடைபெறுகிறது. இந்நிலை யில் பாலக்கோடு குட்லானஅள்ளி பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கு பழங்குடியினர் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது. இதில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 5 பேர் வேட்புமனு தாக் கல் செய்திருந்தனர். இதையடுத்து வேட்புமனு கடந்த 17ஆம் தேதியன்று பரிசீலனை செய்யப்பட்டது. இதில் வேட்புமனு தாக்கல் செய்த 5 பேரும் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கவில்லை. எனவே தேர்தல் பார்வையாளர் இந்த குட்லானஅள்ளி பகுதியிலுள்ள பஞ்சாயத்துத் தலைவர் பதவிக்கான தேர்தலை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
மதுப்பாட்டில்களை பதுக்கியவா் கைது
தருமபுரி, டிச. 25- பாலக்கோடு அருகே மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள கா்த்தாரப்பட்டி கிராமத்தில் முறைகேடாக மதுபட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக போலீசா ருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், பாலக்கோடு காவல் ஆய்வாளா் விஸ்வநாதன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனா். இதில், அக்கிராமத்தைச் சோ்ந்த குமார் என்பவா் சுமார் ரூ. 2 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகளை பதுக்கி வைத்தி ருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதனையடுத்து மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த போலீசார், குமாரை கைது செய்தனா்.
தருமபுரியில் மதுக்கடைகள் மூடல்
தருமபுரி, டிச.25- ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, தருமபுரி மாவட்டத்தில், டிச.27, 30 மற்றும் ஜன. 2 ஆகிய தேதி களில் மூன்று நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தருமபுரி மாவட்டத்தில் ஊரக உள் ளாட்சித் தோ்தல் நடைபெறும் நாளான டிச.27 மற்றும் டிச.30 மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான ஜனவரி 2 ஆகிய மூன்று நாள்கள் அனைத்து மது பானக் கடைகள் மற்றும் அத்துடன் இணைந்த மது அருந்தகங்கள், மதுபானம் விற்க உரிமம் பெற்ற மதுக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என உத்தர விடப்பட்டுள்ளது. இதனை மீறி, மதுக்கடைகள், மதுக் கூடங்கள் திறக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.