tamilnadu

img

ஒகேனக்கல் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலையில் மறியல்

தருமபுரி, நவ. 8- ஒகேனக்கல் குடிநீர் வழங்கக் கோரி அரூர் கிராம பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம், அருர் வட் டம், வேடகட்டமடுவு ஊராட்சிக் குட்பட்டது செங்கப்பாடி கிராமம். இக்கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்கள் குடிக்க ஒகேனக்கல் குடிநீரும், மற்ற தேவைகளுக்கு ஆழ்துளை கிணறு தண்ணீரும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக ஒகேனக்கல் குடிநீர் வருவதில்லை. மேலும், பஞ்சாயத்து மூலம் வழங் கப்பட்ட போர்வெல் தண்ணீரும் வருவதில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீருக்காக பல கிலோமீட்டர் நடந்து சென்று தண் ணீர் எடுத்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதுகுறித்து வேடகட்டமடுவு ஊராட்சி மன்ற தலைவரிடம் கிராம மக்கள் பல முறை முறையிட்டதில், அவர் நிதி இல்லை என தொடர்ந்து கூறி வந்த தாக தெரிகிறது. இதனால், ஆவேச மடைந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு அரூர் - திருவண்ணாமலை செல்லும் சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இத்தகவலறிந்து சம்பவ இடத் திற்கு வந்த காவல் துறையினர் மற் றும் பஞ்சாயத்து தலைவர் ஆகி யோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். அதில், குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த தையடுத்து, பொதுமக்கள் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.