tamilnadu

img

டெங்கு பாதிப்பில் வேலூர் மாவட்டத்துக்கு 3-வது இடம்

வேலூர், அக்.26- “டெங்கு பாதிப்பில், வேலூர் மாவட்டம் மூன்றாவது இடத்தில் உள்ளது’’ என, ஆட்சியர் சண்முக சுந்தரம் கூறினார்.  வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மர்மக் காய்ச்சல், டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பெற்று வருபவர்களை, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் சந்தித்து நலம் விசாரித்தார்.  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  “தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதித்த மாவட்டங்களில், வேலூர் மூன்றாவது இடத்தில் உள்ளது. தற்போது, 927 பேர் டெங்கு வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார். வெளி மாநிலத்தில் இருந்து வரு பவர்களிடம், காய்ச்சல் பாதிப்பு குறித்து சோதனை நடத்தப்படு கிறது. இதற்காக, 13 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத் தில், அரக்கோணம், குடியாத்தத்தில் டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது. இங்கு தினமும், 3ஆயிரம் பேர் காய்ச்சலுக்கு வருகின்றனர். மாவட் டத்தில், 117 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 13 அரசு மருத்துவ மனைகள், ஒரு அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனை உள்ளன. இவை, 24 மணி நேரமும் செயல்படு கின்றன. போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம். இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிவு பெற்ற டாக்டர்கள் விபரம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் ஆட்சி யர் கூறினார்.

;