tamilnadu

img

மீண்டும் உரிமை மீறல்: திமுக வெளிநடப்பு

சென்னை, பிப். 19 - செவ்வாயன்று(பிப்.18) அமைச்சர் பாண்டிய ராஜன் மீது திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு  கொண்டு வந்த உரிமை மீறல் பிரச்சனையை பேர வைத் தலைவர் தள்ளுபடி செய்தார். இதே பிரச்ச னைக்காக மீண்டும் அமைச்சர் மீது உரிமை மீறல் பிரச்சனை கொண்டு வர திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு அனுமதிகோரினார்.  அதற்கு அனுமதி மறுத்த பேரவைத் தலைவர், “ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்ட அந்த பிரச்ச னையை மீண்டும் எழுப்ப அனுமதிக்க முடி யாது” என்றார். மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்பட அனைத்து திமுக உறுப்பினர்களும் தங்கம் தென்ன ரசை பேச அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி னர். பேரவைத் தலைவர் அதை ஏற்கவில்லை. இதை யடுத்து அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.