கோயம்புத்தூர், அக்.10- கோவை மாநகராட்சியின் சொத்து வரி உயர்வு, குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்தது ஆகியவற்றைக் கண்டித்து வியாழ னன்று அனைத்துக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற கருப்புக்கொடி ஆர்ப் பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் பங்கேற்று கைதாகினர். தமிழக அரசு உள்ளாட்சி அமைப்பு களில் 50 சதவிகிதம் முதல் 100 சத விகிதம் வரை சொத்து வரியை திடீ ரென்று உயர்த்தியது. இந்த சொத்து வரி உயர்வைக் கண்டித்தும், இந்த வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி தொடர் இயக்கங்கள் நடைபெற்று வரு கிறது. இதேபோல், கோவை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய் வதற்கு, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு 26 ஆண்டுகளுக்கு ரூ.3 ஆயிரத்து 150 கோடிக்கு மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் வழங்கியிருக் கிறது.
கோவை மாநகர மக்கள், குடி நீருக்காக அந்நியரிடம் கையேந்தும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என ஒட்டுமொத்த கோவை மக்களும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வரு கின்றனர். மக்களின் அச்சத்தை போக்கு வதற்கு பதிலாக கோவை மாநகராட்சி நிர்வாகம், இது குறித்து கருத்து தெரி விப்பவர்களை கைது செய்து சிறை யில் அடைக்கும் அராஜக நடவடிக்கை யை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக சூயஸ் குறித்த அச்சம் மேலும் வலுவடைந்துள்ளது. இந்நிலையில், இப்பிரச்சனை களை முன்வைத்து கடந்த செப்.27 அன்று கோவையில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் அழைப்பு விடுத்தன. ஆனால், இப்போராட்டம் வெற்றி யடையக்கூடாது என்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை யாணை பெற்றனர். இதைத்தொடர்ந்து அக்.10 அன்று கருஞ்சட்டை அணிந்தும், கருப்புக் கொடியேந்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என அனைத்துக் கட்சிகள் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், இப்போராட்டத்திற்கும் காவல்துறை கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது. இருப்பினும் தடை மீறி வியாழனன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆயி ரக்கணக்கானோர் கருப்புக் கொடி யேந்தியும், கருஞ்சட்டை அணிந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு திமுக மாந கர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ தலைமை தாங்கினார். திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா.பழனிசாமி, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், கோவை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செய லாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.சி.கருணா கரன், மாவட்டக்குழு உறுப்பினர் யு.கே. சிவஞானம், கிழக்கு நகரக்குழு செய லாளர் என்.ஜாகீர், பீளமேடு நகர செய லாளர் கே.பாண்டியன், சிங்கை நகர செயலாளர் வி.தெய்வேந்திரன், மதுக் கரை ஒன்றிய செயலாளர் ரவிச்சந்தி ரன், தெற்கு நகரக்குழு செயலாளர் நாகேந்திரன், கட்சியின் சார்பில் முன்னாள் மேயர் காலனி வெங்கடா சலம், கணபதி சிவக்குமார், மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன் குமார், ஆடிட்டர் அர்ஜுன்ராஜ், அ.சேது பதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சிவசாமி, கல்யாணசுந்தரம், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் தன பால், பிரேம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் இலக்கியன், சுசி கலையரசன், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கு.ராம கிருட்டிணன், ஆதித்தமிழர் பேரவை கோவை.ரவிக்குமார், எஸ்டிபிஐ சார்பில் ராஜா உசேன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். முன்னதாக, இந்த கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற் பட்டோர் குவிந்தனர். ஆனால், கைது எண்ணிக்கையை குறைத்துக்காட்ட காவல்துறையினர் திட்டமிட்டு ஆரம்பம் முதலே கூட்டத்தை கலைத்துக் கொண்டே இருந்தனர். இறுதியில் பலரை கைது செய்யாமல் கலைந்து போகச் சொல்லி கெஞ்சல் தொனியில் ஆரம்பித்து, பிறகு மிரட்டல் நடவடிக்கை வரை கையாண்டனர்.