tamilnadu

பூம்புகார் மாணவர் முதலிடம்..

தரங்கம்பாடி:
அகில இந்திய அளவிலான யோகா சூரிய நமஸ்காரம் போட்டி கடந்த அக்.12 அன்று யோகாசன யூரோப் அசோசியசன் ஆப் இந்தியா சார்பில் நடைபெற்றது.2-வது அகிலஇந்திய அளவிலான யோகா சூரிய நமஸ்காரம் போட்டியில்இந்தியாவின் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்குவங்கம், தில்லி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் ஐரோப்பியநாடுகளில் உள்ள போட்டியாளர்கள் என மொத்தம் 400-க்கும்மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாட்டின் சார்பாக தற்காப்பு கலை மற்றும் யோகா பயிற்சியாளர் செண்பகவள்ளி, கவிமணிமாணவன் பூம்புகார் அருகேயுள்ள வானகிரி கிராமத்தைசேர்ந்த வீ.ஜீவா (சப்-ஜூனியர்)முதலிடம் வென்றுஅதற்கான சான்றிதழ் மற்றும் ரூ.1500 பரிசு தொகையையும் பெற்றார்.  வெற்றி பெற்ற மாணவருக்கு பெற்றோர்,உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.