சென்னை, ஆக.7- வங்க கடலில் குறைந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் தமிழகத்தில் வியாழ னன்று (ஆக.8) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மைய அதிகாரி தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை தீவி ரம் அடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதி களில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது.இந்த நிலையில் வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ள தால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரி கூறிய தாவது:- வடமேற்கு வங்க கடலில் உரு வாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக புத னன்று தமிழகத்தின் பெரும்பா லான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. குறிப்பாக நீலகிரி, கோவை மாவட் டங்களில் பலத்த மழை பெய்தது. சென்னையை பொறுத்தவரை வியாழனன்று வானம் லேசான மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மழை பெய்யக் கூடும். தென்மேற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதியில் மணிக்கு 40 கி.மீட்டர் முதல் 50 கி.மீட்டர் வேகத் தில் காற்று வீசும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார். ஏற்கனவே வடகிழக்கு வங்க கடலில் ஒடிசா மாநிலம் பாலசூ ருக்கு 150 கி.மீட்டர் தொலைவில் உருவான ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி ஒடிசா- மே.வங்காளம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படு கிறது. இதன் எச்சரிக்கையாக கட லூர், பாம்பன், தூத்துக்குடி, வ.உ.சி. துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.