சென்னை,ஜூன்28- அ.தி.மு.கவில் பிரச்சனை ஏற்பட்டது முதல் சசிகலா மற்றும் தினகரனின் தீவிர ஆதரவாளராக இருந்த தங்க தமிழ்ச்செல் வன் அ.ம.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வந்தார். மக்க ளவைத் தேர்தலில் அ.ம.மு.க. படுதோல் வியை சந்தித்த நிலையில் தினகரனுடன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர் அ.தி.மு.க.வில் இணையக் கூடும் என தகவல்கள் வெளியான நிலையில் தினகரனுக்கு எதிராக தங்க தமிழ்ச் செல்வன் கருத்து தெரிவித்த ஆடியோ வெளியானது. இதையடுத்து தங்க தமிழ்ச செல்வனை அமமுக கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக தினகரன் தெரிவித்தார். இந்நிலையில் வெள்ளி யன்று(ஜூன் 28) அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்க தமிழ்ச் செல்வன் தி.மு.க.வில் இணைந்தார்.