Present continuous tense என்பது நீங்கள் இப்போது செய்து கொண்டிருக்கும் செயலைக் குறிக்கும். இது
I
We
They
You
He
She
It
என எல்லோருக்கும் எல்லாவற்றுக்கும் பொருந்தும். அதுமட்டுமல்ல, ஒரு செயலை நீங்கள் பல காலமாக செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றாலும் Present continuous tense Sentences ஐப் பயன்படுத்தலாம். உதாரணமாக I am studying in Nehru College. Balu is writing a novel. kannan is learning english. B.Com., B.A., B.E., என்று எந்த course ஆக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்தக் கல்லூரியாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். செயல் தொடர்ந்து கொண்டிருக்கிறது Action is Continuing. இன்று விமுறையாக இருக்கலாம். அதனால் கல்லூரிக்குப் போகாமல் கூட இருக்கலாம். (விடுமுறை நாட்களைத் தவிர மற்ற நாட்களில் கண்டிப்பாகக் கல்லூரிக்குச் சென்றுவிட வேண்டும். இது ஒரு சின்ன அறிவுரை. இது வேறு Tenseல் வரும். அதைப் பின்னர் பார்க்கலாம்). ஆனால் யார் எப்போது உங்களைக் கேட்டாலும், நீங்கள் I am studying in Nehru College என்று தாதாளமாக Present Continuous tense ஐ பயன்படுத்தலாம்.
Balu is writing a novel. இந்த Sentence ல் பாலு இரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதத் தொடங்கியிருந்திருக்கலாம். இன்று நீங்கள் பாலுவைப் பார்க்கும் நேரத்தில் அவர் தூங்கிக் கொண்டு கூட இருக்கலாம். He is sleeping என்பது எத்தனை Correct. அதே அளவு Balu is writing a novel என்பதும் correct. எனவே ஒரு செயல் அப்போதுதான் செய்து கொண்டிருக்கப்பட வேண்டும் என்பதில்லை. அது ஒரு process ஆகக் கூட இருக்கலாம். இரண்டு, மூன்று வருடங்களாக நிகழ்ந்து கொண்டிருக்கலாம். இரண்டு, மூன்று மணி நேரமாக நடந்து கொண்டிருக்கலாம். இங்கு நமக்குத் தேவை Present Continuous tense தான்.
Kannan is learning English. நீங்கள் கண்ணனைப் பார்க்கும் போது. அவர் பாடிக் கொண்டிருக்கலாம். ஆடிக் கொண்டிருக்கலாம்.
Kannan is singing
Kannan is dancing
மேலே குறிப்பிட்ட இரண்டு வாக்கியங்களையும் சேர்த்து kannan is singing and dancing எல்லாமே correct.
Kannan is learning English என்பது ஒரு process. ஒரு மாதமாக அவர் கற்றுக் கொண்டிருக்கலாம். முழுமையாக கற்றுக் கொள்ள ஓராண்டு கூட ஆகலாம். ஆனால் அவர் கற்றுக் கொண்டிருக்கும் காலம் முழுக்க நீங்கள் kannan is learning English என்று கூறலாம்.
So, Present Continuous tense என்பது இப்போது நடந்து கொண்டிருப்பதையும், சில காலமாகத் தொடர்ந்து, இப்போதும் நடந்து கொண்டிருப்பதையும் குறிப்பிடப் பயன்படுத்தலாம்.
கீழே சில குறிப்புகள் உள்ளன. அவற்றை Present Continuous tense ல் எழுதுங்கள்.
Jasmine (write)
My friend Saravanan (stand)
My father (eat)
Kala’s classmate Geetha (prepare)
நமக்கு Present Continuous tense ன் structure தெரியும். மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டுமென்று நினைப்பவர்களுக்காக, இதோ…
I + am + root verb + ing
We + are + root verb + ing
They + are + root verb + ing
You + are + root verb + ing
He + is + root verb + ing
She + is + root verb + ing
It + is + root verb + ing
Elephant is eating a sugarcane.
Qus: What is elephant doing?
Ans: Elephant is eating.
What is elephant eating?
Elephant is eating a sugarcane.
Where is elephant eating the sugarcane?
Elephant is eating the sugarcane in the temple.
இவ்வாறு நீங்கள் எந்தவொரு வாக்கியத்தை எழுதினாலும், அதற்கு இரண்டு, மூன்று கேள்விகளைக் கேட்டு, அதன்பின் அதற்கான பதில் வாக்கியங்களை எழுதுங்கள். இப்படி எழுதும்போது சொல்லிக் கொண்டே எழுத வேண்டும்.