education

img

ஆங்கிலம் கற்பது எளிதே

ஆங்கிலத்தில் மொத்தம் உள்ள எழுத்துக்கள் 26. A e I o u என்பவை vowels. எழுத்துக்களை கோர்த்து அர்த்தம் வருமாறு அமைத்தால் அவை வார்த்தைகள். Naming words are nouns. Nounகளை விவரிப்பவை adjectives.

இப்பொழுது verbs என்றால் என்ன என்று அறிந்து கொள்வோம். இப்பொழுது என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்? வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதை ஒரு வாக்கியமாக சொல்வதென்றால் I am reading என்று சொல்லலாம். இதில் reading என்பது என்ன வேலை செய்து கொண்டிருக்கிறீர்களோ அதைக்குறிக்கும். Read என்பது rootverb. இதுபோல் நாம் செய்யும் வேலைகளை குறிக்கும் சில சொற்களைப் பார்க்கலாம்

Read.  

Write

Copy

Cut

Paste 

Sing

dance 

sleep 

go 

come 

see 

study

இவை அனைத்தும் verbs. Rootverbs.

இது போன்று ஒரு இருபது சொற்களை உங்கள் நோட்டு புத்தகத்தில் எழுதுங்கள்.

ஆங்கிலத்தில் சில சொற்கள் verbs ஆகவும் வரும். Noun ஆகவும் வரும். சில சொற்கள் noun ஆகவும் வரும். Adjectives ஆகவும் வரும். இது பற்றி பின்னர் பார்க்கலாம்.

இப்பொழுது நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள். எப்படி வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

I am reading loudly

I am reading slowly

என்று பல விதமான பதில்களை நீங்கள் கூறக்கூடும். இதில் loudly slowly என்ற வார்த்தைகள் நீங்கள் செய்யும் செயலை அதாவது verbsகளை விவரிக்கின்றன. இவை adverbs எனப்படும். 

Verbs adverbs nouns adjectives prepositions articles என்று பல parts of speech உள்ளன. இவற்றில் நான்கு மட்டுமே நாம் இதுவரை பார்த்திருக்கிறோம். மற்றவற்றை, போகப் போகத் தெரிந்து கொள்ளலாம். 

வார்த்தைகளை வாக்கியம் அடுக்கினால் கிடைக்கும். இது சரியா? 

வார்த்தைகளை அடுக்கியாயிற்று. ஆனால் அர்த்தம் வரவில்லையே. வார்த்தைகளை முறைப்பட அர்த்தம் வரும் வகையில் அடுக்கினால் மட்டுமே வாக்கியம் கிடைக்கும். இதேதான் ஆங்கிலத்திற்கும். வார்த்தைகளை ஒழுங்காக அடுக்க வேண்டும். முதலில் வார்த்தைகளை எப்படி அடுக்குவது என்று பார்ப்போம். 

I am reading

உங்கள் அருகில் இருப்பவரைப் பாருங்கள். அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? 

She is sleeping.

இப்போது கேள்வி கேட்போம்.

Where is she sleeping?

She is sleeping in the bedroom.

Why is she sleeping? 

She is tired. So she is sleeping.

He is standing.

இப்போது நீங்கள் கேள்வி கேளுங்கள்

................. is he standing?

Answer கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதில் வர வேண்டுமானால் நீங்கள் என்ன கேள்வி கேட்டிருக்க வேண்டும்.

He is standing near me. 

Where

Why

What

When 

Who

How என்பவை கேள்விக்கான சில சொற்கள்.

Present Continuous Tense

கீழே கொடுக்கப்பட்டவற்றை உங்கள் நோட்டுப் புத்தகத்தில் எழுதிக் கொள்ளுங்கள். 

I+am+root verb+ing

We+are+root verb+ing

They+are+root verb+ing

You+are+root verb+ing

He+is+root verb+ing

She+is+root verb+ing

It+is+root verb+ing

நான் மீண்டும் மீண்டும் சொல்வது ஆங்கிலம் கற்பது எளிது. தமிழில் சில வாக்கியங்களை பார்ப்போம். 

நான் எழுதிக் கொண்டிருக்கிறேன். 

நாங்கள் படித்துக் கொண்டிருக்கிறோம் 

அவர்கள் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள் 

நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய் 

நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் 

அவள் பேசிக்கொண்டிருக்கிறாள் 

அவன் குடித்துக் கொண்டிருக்கிறான் 

அது தாவிக் கொண்டிருக்கிறது 

அவை பறந்து கொண்டிருக்கின்றன 

அவனா அவளா அதுவா அவர்களா அவைகளா என்பதைப் பொறுத்து வாக்கியங்களில் வினைச்சொற்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். Englishல் அந்தக் கவலை எல்லாம் இல்லை. வினைச் சொற்களை மாற்ற வேண்டாம் வினைச்சொற்கள் எல்லாருக்குமே same தான்.  

இப்பொழுது கீழே கொடுக்கப்பட்டுள்ள கோடிட்ட இடங்களை நிரப்புங்கள்.

I am ......... ing

we are......... ing

they are......... ing

you are......... ing

he is ......... ing

she is ......... ing

it is......... ing

இதை ஆங்கிலத்தில் present continuous tense என்று குறிப்பிடுவார்கள்.