tamilnadu

img

வைக்கோலை பயன்படுத்தி புதிய தொழிற்சாலைகளை அமைக்க முன் வருமா தமிழக அரசு? - ஐ.வி.நாகராஜன்

வேலையின்மையே பொருளாதார சரிவுக்கு முக்கிய காரணம் என பொருளாதார ஆய்வு நிறுவனம் மூடிஸ் தனது சமீபத்திய ஆய்வு அறிக்கையிலும் தெரிவித்துள்ளது. இந்திய வேலையின்மை விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. நடப்பு நிதியாண்டில் இதுவரை கணிக் கப்பட்ட மதிப்பீடுகளுக்கு மாறாக இந்திய பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.  கடந்த 2018ஆம் ஆண்டில் சரியத் துவங்கிய இந்திய பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும் என்று பல்வேறு புள்ளி விபரங்கள் தெரிவித்து வருகிறது. இதற்கு பிரதான காரணமே வேலையின்மைதான். 

வேலையிழப்பு, வேலைபறிப்பு என்ற கடும் நெருக்கடிக்கு மத்தியில் கிராமப்புற பொருளாதாரம் நொறுங்கிக்கொண்டிருக்கி றது. புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை அரசியல் ரீதியாக ஏற்படுத்த வேண்டியுள்ளது.  இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் சம்பா அறுவடை பணிகள் நிறைவடைய உள்ள நிலையில் நெல் அறுவடைக்கு பின்னர் மீதமிருக்கும் வைக்கோலை பயன் படுத்தி புதிய தொழிற்சாலைகளை உரு வாக்க அரசு முயற்சித்தால் அது உரிய பயன ளிக்கும் என்று விவசாயிகளும், பொதுமக்க ளும் கருதுகின்றனர். தற்சமயம் வைக் கோலை வீட்டில் வளர்க்கும் கால்நடைகளு க்கு உணவாக பயன்படுத்துவதோடு மேலும் கூடுதலாக காகித ஆலைகளிலும், காளான் வளர்ப்பு, கோழி வளர்ப்பு பண்ணைகளிலும் வைக்கோலை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வெளிநாடுகளில் வைக் கோலை பயன்படுத்தி வைக்கோல் கட்டு களை கயிற்றால் கட்டி அதனுள் கலப்பு உர மணலை நிரப்பி காய்கறி மற்றும் மூலிகை செடிகளை வளர்த்து வருகின்றனர். இன்னும் கூடுதலாக, தரமற்ற மண் உள்ள இடங்களில் இந்த நடைமுறை மூலம் காய்கறி, தாவரங்க ளை பயிரிட அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த வகை தோட்டத்திற்கு நீர் அதிகம் தேவையில்லை என்கின்றனர்.

குறைந்த நீரில் வைக்கோலை உடைத்து அதை சிதைத்து தேவையான சத்துக்களை வளர்க்கும் செடிகளுக்கு பயன்படுத்து கின்றனர். வீட்டு தோட்டங்களில் உலர் தீவனமாக சேமித்து வைத்து கால்நடை களுக்கு உணவாக பயன்படுத்தும் வைக்கோ லில் கச்சா புரதச்சத்து இரண்டு சதவீதம் மற்றும் நார்சத்து, சுண்ணாம்பு சத்து, மணி சத்து போன்ற சத்துகள் உள்ளன. கால்நடை களின் வளர்ச்சிக்கு ஏற்ப வைக்கோலை மதிப்பு கூட்டி பயன்படுத்தும் நடைமுறை யும் தற்போது நடைமுறையில் உள்ளது. வைக்கோலை சேகரித்து பெரிய மற்றும் சிறிய போராக இருப்பு வைத்தும், உருளை  கட்டாக கட்டிக்கொண்டு வந்தும் மாடுக ளுக்கு வழங்கப்படுகிறது. அதோடு இந்த வைக்கோலை கூழாக்கி பேப்பர் கப், தட்டுகள் போன்ற உபயோகப்பொருள்களை தயா ரிப்பதற்கும் அதற்கான தொழிற்சாலை களை உருவாக்குவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இப்படிப்பட்ட தொழிற்சாலைகளை டெல்டா மாவட்டங்க ளில் தொடங்கினால் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க முடியும். 

தற்போது வைக்கோல் கட்டும் மிஷின்க ளுக்கும், அறுவடை இயந்திரம் போல் தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது. வைக்கோலை மிஷின் வாயிலாக கட்டுப்போட கட்டு ஒன்றுக்கு ரூ.40 கட்டணம் வசூலிக்கும் மிஷினின் உரிமை யாளர்கள் ஒரு ஏக்கருக்கு 50 முதல் 60 கட்டு கள் வரை கட்டுகின்றனர். அதனால் ஒரு ஏக்கர் நிலத்தில் வைக்கோல் கட்ட ரூ.2000 முதல் ரூ. 2500 வரை செலவு பிடிக்கிறது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  டெல்டா மாவட்டங்களில் நெல் அறு வடையில் கைப்பிடித்தம் ஏற்படும் வகையில் வைக்கோல் விற்பனை வாயிலாக சில ஆயி ரங்கள் செலவுக்கு கிடைக்கிறது என்று விவ சாயிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் வைக்கோலை மூலப்பொருளாகக் கொண்டு உற்பத்தி பொருட்கள் தயாரிக்கும் தொழிற் சாலைகளை தொடங்கினால் ஓரளவு வேலை யின்மைக்கு முடிவு ஏற்படும் என்று பல்வேறு மாநாடுகளின் வாயிலாகவும் விவசாயிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.  இந்த தொழிற்சாலைகள் குறித்து அரசு பரிசீலிக்கும்பட்சத்தில் மூலப்பொருட்கள் உற்பத்தி மலிவான விலையில் கிடைப்பது மட்டுமின்றி விவசாயிகள் இளைஞர்களுக் கும் வேலைவாய்ப்பை உறுதிசெய்ய முடியும்.

;