tamilnadu

img

விழிப்புணர்வுக்கான கல்வியே இன்றைய தேவை - அ.மணவாளன்

ஆசிரியர்களின் பொறுப்பு தன்னைச் சுற்றியிருக்கும் சூழ்நிலைகளைப் புரிந்து  கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டியதாகும். ஆசிரியரின் உதவியுடன் தானாகவே உருவாக்கிய வார்த்தைகளை மாணவர்கள் குழு ஆராய்கிறது. ஒரு குழு சிந்திக்கும் வார்த்தைகள் தான் மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்குகிறது என்றும் சிந்தனை இல்லாத வார்த்தைகள் செத்துப்போனவை என்று பாலோஃபிரெயர் கூறுகிறார்.

பிரேசில்  நாட்டில் விழிப்புணர்வுக்கான கல்வியை கொண்டு சென்றதோடு உலகத்திற்கே வழிகாட்டிய  பாலோஃபிரெயரின் பிறந்தநாள் செப்டம்பர் 19. அவரது பிறந்தநாளில் நாம் கல்வியும் விழிப்புணர்வும் பற்றி விவாதிப்பது மிகச் சரியாக அமையும். சமூகத்தின் ஜனநாயக சூழ்நிலைக்குள் இருந்தபடியே கலாச்சாரத்தை ஜனநாயகமாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.  பிரேசிலில் 1964இல் 40 லட்சம் மாணவர்களுக்கு கல்வி  கிடையாது. 14 வயதுக்கு  மேல் உள்ளவர்கள் 160 லட்சம் மக்கள் எழுத்தறிவு அற்ற நிலையில்  இருந்தார்கள். இவை நாட்டின் வளர்ச்சிக்கும் ஜனநாயக மனோபாவத்திற்கும் பெரும்  தடைகளாக இருந்தன.

அறியாமை என்றால் எழுத்தறிவில்லாமை மட்டும் தான் என்று ஒரு வரையறைக்குள் வைக்கவில்லை. வரலாற்றுப் பூர்வமான நடவடிக்கைகளில் பங்கேற்கவும் ஈடுபாடு கொள்ளவும் இயலாத அனுபவமின்மையும் அறியாமை யில் உள்ளடங்கியதே!  மனிதனுடைய தாக்கம் உலகில் அவனுடைய வாழ்நிலையில் மட்டுமின்றி உலகுடன் அவன் மேற் கொள்ளும் உறவு மற்றும் படைப்பிலும் கலாச்சாரத்தின் வாயிலாகவும் வெளிப்படுகிறது. இந்த உறவை எழுத்தறிவு பெற்றவர்களும், பெறாதவர்களும் ஒரே மாதிரியாக நடைமுறைப்படுத்துவார்கள். யதார்த்தத்தைப்பற்றிய வெற்று  விழிப்புணர்வுக்கும் மாய்மால விழிப்புணர்விற்கும் மேலாக விமர்சனப் பூர்வமாக விழிப்புணர்வு தான் மக்களின்  வளர்ச்சியை நோக்கி அமையும்.

  • செயல்துடிப்புமிக்க ஆக்கப்பூர்வமான கருத்து விவா தங்களைக் கொண்ட விமர்சனப்பூர்வமான விமர்சனங்க ளை ஊக்குவிக்கும் வழிமுறைகள்.
  • கல்வியின் உள்ளடக்கத்தின் மாறுதல்
  • விஷயங்களை கிரகித்துக்கொள்ள சுருக்கி அளிக் கும் முறையும், மற்றும் சூழ்நிலைக்கும் உறவு ஏற்படுத்திய  வழிகள்.  கூட்டான தேடுதலில் ஏற்பட்டிருக்கும் இரண்டு துருவங்களுக்கிடையான இரண்டறக்கலக்கும் உறவு, அன்பு, பணிவு, எதிர்பார்ப்பு, நம்பிக்கை, விமர்சனம் போன்ற அச்சில் தான் துவங்கப்படுகிறது.

விமர்சனப் பூர்வமான ஒரு தேடலுக்கு அவர்கள் கூட்டு சேரல் அவசியம் உண்மையில் விவாதம் மட்டும் தான், யதார்த்தமான கருத்து பரிமாற்றத்தை நிகழ்த்துகிறது. இந்த விவாதங்கள் எல்லாம் லட்சிய உணர்வும் கொண்டதாக இருக்க வேண்டும். படிப்பதை புரிந்து கொள்ளவேண்டும். புரிந்து கொள்வதை எழுத வேண்டும். எழுத்துக்கள் மூலம் கருத்து பரிமாற்றத்தை  நிகழ்த்த வேண்டும். ஆசிரியர்களின் பொறுப்பு தன்னைச் சுற்றியிருக்கும் சூழ்நிலைகளைப் புரிந்து  கொண்டு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டியதாகும். ஆசிரியரின் உதவியுடன் தானாகவே உருவாக்கிய வார்த்தைகளை மாணவர்கள் குழு ஆராய்கிறது. ஒரு குழு சிந்திக்கும் வார்த்தைகள் தான் மக்களிடம் விழிப்புணர்வை உருவாக்குகிறது என்றும் சிந்தனை இல்லாத வார்த்தைகள் செத்துப்போனவை என்று பாலோஃபிரெயர் கூறுகிறார். 

வயது வந்துள்ளவர்களுக்கு கல்வியில் பயிற்சி அளிக்கும் போது திரும்பத் திரும்பச் சொல்லி மனப்பாடம் செய்யும் இயந்திரமான முறைகளை கைவிட்டு சுயமாக விமர்சனமான  விழிப்புணர்வோடு சாத்தியக் கூறுகளை அவர்களிடம் உருவாக்கி அதன் மூலம் தானாகவே எழுதவும், படிக்கவும் அவர்களிடம் திறன் ஏற்படச்செய்ய வேண்டும். மக்கள் விழிப்புணர்வு அடையாததற்கான கல்வித் திட்டத்தை பிரேசிலில் உருவாக்கினார்கள். குழுக்களின் வாயிலாக, பிரேசிலில் மக்கள் பிரச்சனைகளை ஆராய்ந்து  கற்பிப்பதற்கேற்ற சிறு குழுக்களை உருவாக்கினார்கள். அக் குழுக்களிடமிருந்து உருவாக்கப்பட்ட வார்த்தைகளை மக்களிடம் கொண்டு சென்று கற்பித்தார்கள். ஜனநாயகத்தை பகுத்தறிவற்றதாக   மாற்றுவதன் மூலம்  ஜனநாயகம் வெளியேற்றப்படுகிறது. தனி நபர் மரியாதையிலும், அன்புச் சூழ்நிலையிலும் தான் ஜனநாயகம் மலர்கிறது. பலம் வாய்ந்த ஜனநாயகம் என்றால் மக்களைக் கண்டு அஞ்சாமலும்  மக்கள் அரசை கண்டு  அஞ்சா மலும் இருக்கவேண்டும். 

மாறிக்கொண்டிருக்கும் சமூகம் 

மற்றவர்களுடனும்  உலகத்துடனும் உறவு  வைத்துக் கொண்டிருக்கும் போதுதான்  நாம் மனிதர்களாகிறோம். நம்மிடமிருந்து தனித்திருக்கும் உண்மை நிலைப் பாட்டை அறிந்து கொள்ளும் போதும் தெரிந்து கொள்ளும் போதும்தான் நாம் மனிதர்களாகிறோம். விலங்குகளால் உலகத்துடன் உறவுகொள்ள முடியாது.  மனிதர்களின் உறவு பலவகையானது. இச் சூழ்நிலை யில் ஒரே மாதிரியான சவால்களையும் மிகவும் மாறுபட்ட சவால்களையும் மனிதர்கள் ஒரே பாணியில் எதிர்கொள்ள வில்லை. அவர்கள் தாங்களாகவே  ஒன்றுபடுகிறார்கள். மிகச்சிறந்த படிப்பினைகளைக் கற்று  தீர்வுகாண்கிறார்கள். மனிதர்கள் விமர்சனப் பூர்வமாக தான் உலகுடன் உறவு கொள்கிறார்கள். மனிதக் கலாச்சார வரலாற்றின் அடிப்படைக் கண்டுபிடிப்புகளில் ஒன்றுதான் காலம். எழுத்தறிவு அற்ற சமூகத்தில் காலத்தின் அழிவைப்பற்றி அறியாததால் காலத்தை இழந்தார்கள்.  ஒரு பூனைக்கு விழிப்புணர்வு கிடையாது. மனிதர்கள் காலத்திற்குள் நிலைத்து நிற்கிறார்கள். காலத்திலிருந்து வெளியே  வந்து காலத்துடன் தன்னை இணைத்துக் கொள்கிறார்கள். மனிதன் சூழ்நிலைகளுடன் இணங்க மறுக்கும் போது பிணைப்பு ஏற்படுத்தும் நிகழ்வு வெவ்வேறானது. யதார்த்தத்துடன் ஒன்று சேரும் திறனும் அந்த யதார்த்தத்தை உருவாக்கு வதற்கு தேர்ந்தெடுக்க வேண்டிய விமர்சனப் பாங்குடைய திறனும் ஒன்று சேரும்போது தான் பிணைப்பு உருவாகிறது. 

தேர்ந்தெடுக்கும் திறனை மனிதன் இழந்து  பிறருடைய முடிவுக்கு கீழ்படியும் வரை அவருடைய முடிவுகள் பொருத்த மானதாக இருக்காது. மாறாக ஒத்துப்போனவர்கள், நீக்குப் போக்கு உடையவர்கள் சாதாரண மனிதர்கள். சமூக மாற்றத்திற்கான கருத்துடையவர்கள் ஒத்துப்போக மாட்டார்கள். அவர்கள் நீக்குப் போக்கு அற்றவர்கள் என்றும் விமர்சனப்படுத்துகிறார்கள்.  மக்களோடு இருப்பவர் படைப்பாளியாகிறார். ஒத்துப் போகின்றவன் படைப்பாகின்றான். ஒத்துப்போவது என்பதில் தன்னை தற்காத்துக் கொள்ளும் இயலாமை வெளிப்படு கின்றது. சூழ்நிலையின் சவால்களை எதிர்க்கும் மனிதர்கள் உலகத்துடன் உறவுகொள்ளும் போது யதார்த்தத்தில் இணைகிறார்கள். உலகத்துடன் இருந்த மனிதர்களின் பிணைப்புகள் கலாச்சாரம் மற்றும் சமூகத்தின் அசைவற்ற நிலையை அனுமதிப்பதில்லை.

தனக்கு பிடித்தமான முறையில் சிந்திக்கவும் செயல்பட வும் அனுமதிக்காத வெளிப்படையான பிணைப்புகளிலி ருந்து மனிதன் விடுதலை பெற்றுவிட்டான்.  தனக்கு எது பிடிக்கும் என்று அறிந்துகொள்ளவும் சிந்திக்கவும் சீர்தூக்கிப் பார்க்கவும் விரும்பினால் அதற்கேற்பச் செயல்படும் உரிமை மனிதனுக்கு இருக்கின்றது.  ஒத்துப்போகும் போது அவன் மேலும் பலவீனமடை கிறான்  ஒத்துப்போகும் போது மேலும் தூண்டப்படுகின்றான். பலவீனத்தால் ஆன  மனிதன் வாத நோய் பிடிக்கப்பட்ட வனை போல் தன்னை நெருங்கிக் கொ ண்டு இருக்கும்  கொடுமைகளை அவன் உற்றுப்பார்த்துக்  கொண்டு இருக்கின்றான். பிறருடைய  எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் போது முடிவுகள் மாயையாகி விடுகின்றன.  

வகுப்புவாதம் முக்கியமாக உணர்ச்சிப் பெருக்கானதும் விமர்சன பாங்கற்றதுமாகும். அதோடு கர்வம் நிரம்பியதும் பேச்சுவார்த்தைக்கு எதிரானதும்     கருத்துப் பரிமாற்றத்திற்கு இசைவற்றதுமாகும்.பிறவி அடிப்படையிலேயே வகுப்புவாதத்தை பேசும் வலதுசாரிகளால் வகுப்பு வாதம் கடைப்பிடிக்கும் போக்கு கண்டனத்திற்கு உரியதா கும். வகுப்புவாதி எதையும் ஆக்கப்பூர்வமாக சிந்திப்ப தில்லை.  அவர்கள்  எதையும் படைப்பதில்லை. ஏனென் றால் அவர்களால் அன்பு செலுத்த முடியாது.   பிறருடைய முடிவுகளை அவமதித்து தன்னுடைய முடிவை  பிறர் மீது திணிக்க முயற்சிக்கிறான். மக்கள் பிரச்சனை களில் விழிப்புணர்வு பெற்றால் தான் பிரச்சனைகளை தீர்க்க முடியும். சமூக மாற்றத்திற்கான சூழல் உருவாகும்.       

கட்டுரையாளர் : தமிழ்நாடு அறிவியல் இயக்கம், புதுக்கோட்டை


 

;