tamilnadu

img

தனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 சிகிச்சைக்கான கட்டணம் - தமிழக அரசு நிர்ணயம்

தனியார் மருத்துவமனைகளில், கோவிட்-19 சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,438 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், தமிழகத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  28,694 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், தனியார் மருத்துவமனைகளில் கோவிட்-19 சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, அறிகுறிகள் இல்லாதவர்கள் மற்றும் லேசான அறிகுறியுடன் சிகிச்சை பெறுவோருக்கு நாளொன்றுக்கு ரூ.5,000 முதல் ரூ.7,500 வரை கட்டணமும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.15,000 வரை கட்டணமும் தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கலாம் என்று தமிழக அரசு நிர்ணயத்துள்ளது.