மும்பை,மே 31-மகாராஷ்டிரா மாநிலத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவரை சாதி வன்கொடுமைக்கு உட்படுத்தி தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்டுள்ள 3 பெண் மருத்துவர்களுக்கு ஜூன் 10 வரைநீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.மகாராஷ்டிரா மாநிலத்தின்தலைநகரான மும்பையில் உள்ள பி.ஒய்.எல். நாயர் அரசு மருத்துவ மனையில் பணியாற்றி வந்தவர் பாயல்டாட்வி(26). பழங்குடியினத்தை சேர்ந்த இவரை சாதியின் பெயரால் உடன் பணியாற்றும் சில மருத்துவர்கள்தொடர்ந்து இழிவுப்படுத்திபேசியும் கேவலப்படுத்தியும் வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த பாயல் டாட்வி,மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதி அறையில் கடந்த 22-ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மூன்று பெண் மருத்துவர்களும் சேர்ந்து தனது மனைவியை கொன்று விட்டதாக பாயல் டாட்வியின் கணவர் சல்மான் குற்றம்சாட்டியிருந்தார். பாயல் டாட்வியின் மரணத்துக்கு காரணமான வர்கள் என்று கருதப்படும் மருத்துவர்கள் பக்தி மெஹேரே, அன்க்கிட்டா கன்டேல்வால், ஹேமா அஹுஜா ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள மூன்று மருத்துவர்கள் மீதும் சாதி வன்கொடுமை தடுப்பு சட்டம், ‘ரேகிங்’ தடை சட்டம்,தற்கொலைக்கு தூண்டிய சட்டப்பிரிவு ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 மருத்துவர்களையும் 31 ஆம்தேதி வரை போலீஸ் காவலில்வைத்து விசாரிக்க நீதிபதிஅனுமதி அளித்திருந்தார்.வெள்ளியன்று 3 பேரும் நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜூன் 10ஆம் தேதி நீதிமன்ற காவலில்அடைக்குமாறு உத்தரவிடப் பட்டது.