tamilnadu

முதல்கட்ட வாக்குப்பதிவு மோசடியாக நடந்துள்ளது

கொல்கத்தா, ஏப்.15-நாட்டில் பல மாநிலங் களில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு மோசடி யாகவே நடந்துள்ளது. இது தொடருமானால், தேர்தல் ஆணையம் நம்பகத் தன்மை யை இழந்துவிடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி குற்றம்சாட்டினார்.கொல்கத்தா சென்றுள்ள சீத்தாராம் யெச்சூரி அங்கு செய்தியாளர்களைச் சந்தித் தார். அப்போது அவர் கூறியதாவது:மேற்கு வங்கம் உட்பட நாட்டில் பல மாநிலங்களில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப் பதிவில் மிகப் பெரிய அளவில் மோசடிகள் நடைபெற்றுள்ளன. வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்டார்கள். திரிபுராவில் பல்வேறு வடிவங்களில் மோசடிகள் நடைபெற்றுள்ளன. அங்கு முதல் கட்டமாக வாக்குச் சாவடிகளை கைப்பற்றியிருக்கிறார்கள். பின்னர் இடதுமுன் னணிக்கு வாக்களிக்க வந்தவர்கள் மிரட்டப்பட்டு வாக்க ளிக்கவிடாமல் திருப்பி அனுப்பப்பட்டார்கள்.


அப்படியும் துணிந்து வாக்களிக்க வந்தவர்களை, அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். இறுதியாக, வாக் களிக்கும் நேரம் முடிவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே வாக்குச் சாவடிகள் மூடப்பட்டன. அதன்பின்னர் உள்ளே என்ன நடந்தது என்று நமக்கு நன்கு தெரி யும். தேர்தல் ஆணையம் இதனை ஆய்வு செய்திட வேண்டும்.ஆந்திர மாநிலத்தில் சிலபகுதிகளில் தேர்தல் பிற்பகல் 2 அல்லது 3 மணிக்குத்தான் தொடங்கி, மறு நாள் காலை வரை நடந் திருக்கிறது. நவீன தொழில்நுட்பத்தைப் பற்றி தேர்தல்ஆணையம் மிகவும் தம்பட்டம் அடித்துக்கொண்ட போதிலும், அதன் தோல்வி எதிர்பாராதது.முதல் கட்ட வாக்குப் பதிவு போன்றே இரண்டாம் கட்ட வாக்குப் பதிவும் நடைபெறுமானால், பின்னர் உங்கள் மீதான நம்பிக்கை என்பது அறவே இருக்காதுஎன்று தேர்தல் ஆணை யரிடம் கூற இருக்கிறோம். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார். பின்னர் அவர், பிரதமர் மோடிக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டார். அடுத்து மத்தியில் ஒரு மாற்று மதச்சார்பற்ற அரசாங்கம் சாத்தியமே என்றும் கூறி னார். ஏப்ரல் 17 முதல் 21வரை கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் தான் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தார்.செய்தியாளர்கள் சந்திப் பின் போது, சிபிஎம் மேற்கு வங்க மாநிலச் செயலாளர் டாக்டர் சூர்யகாந்த் மிஸ்ரா உடன் இருந்தார். (ந.நி.)

;