குனா, ஜூன் 12 - மத்தியப்பிரதேச மாநில முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சிவநாராயணன் மீனா மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 68. உத்தர்கண்ட் மாநிலத்தில் செவ்வாயன்று இரவு புனித யாத்திரை மேற்கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவநாராயணன் மீனாவின் மறைவிற்கு மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் உட்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மறைந்த முன்னாள் அமைச்சர் சிவநாராயணனின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான மத்தியப்பிரதேச மாநிலம் கிடாகெடி கிராமத்தில் வியாழனன்று நடைபெற உள்ளது.