tamilnadu

பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்கள்

பினராயி, ஏப்.23-வாக்குப்பதிவு இயந்தி ரங்களை சீராக பராமரிக்க தேர்தல் ஆணையத்தால் சாத்தியமாகவில்லை எனகேரள முதல்வர் பினராயிவிஜயன் புகார் தெரிவித்தார்.கண்ணூர் மாவட்டம் பினராயி கிராமத்தில் உள்ள ஆர்.சி.அமலா பேசிக் யு.பி.பள்ளியில் வாக்களித்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து அவர் கூறியதாவது: வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து ஏற்கனவே புகார்கள் எழுந் தன. பிரச்சனை ஏற்படாமல் தேர்தல் ஆணையம் உறுதிப் படுத்தியிருக்க வேண்டும். நான் வாக்களித்த வாக்குச்சாவடியிலும் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. அடுத்து உள்ள வாக்குச் சாவடியிலும் அருகில் உள்ளபஞ்சாயத்திலும் இயந்திரங்கள் பழுதாகி வாக்களிப்பு தடைபட்டது.மாநிலத்தில் பல்வேறு இடங்களில் இயந்திரங்கள் பழுதாகி உள்ளதாக புகார்செய்யப்பட்டுள்ளது. போதுமான அளவில் கவனத்தோடுவாக்குப்பதிவு இயந்திரங் கள் குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை இது தெளிவுபடுத்துகிறது.இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.


‘மோடி இயந்திரம்’


குறிப்பிட்ட வாக்குப் பதிவு மையத்தில் பதிவான அனைத்து வாக்குகளும் தாமரை சின்னத் திற்கு விழுந்ததாக புகார்எழுந்துள்ளது குறித்து கருத்து தெரிவித்த மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன், ‘கேரளத்திலும் மோடி இயந்திரம் வந்துள்ளதாக தெரிகிறது’ என்றார். 


விவிபாடில் பாம்பு


கண்ணூர் கண்டகை எல்.பி. பள்ளியில் 145ஆம் எண் வாக்குப்பதிவு அறையில் விவிபாட் இயந்திரத்திற்குள் பாம்பு இருப்பது கண்டறி யப்பட்டது. பாம்பை வெளியேற்றிய பிறகு சற்று தாமத மாக அங்கு வாக்குப்பதிவு துவங்கியது.



;