tamilnadu

img

புதுச்சேரிக்கு ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் பராக்! பாரக்! - எஸ்.ராமச்சந்திரன்

புதுச்சேரிஇலக்கியத் திருவிழா என்ற பெயரில் வருகிற  செப்டம்பர் 27 முதல் 29  வரை மூன்று நாட்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பா.ஜ.க., ஆர்..எஸ்.எஸ். சங் பரிவாரங்கள் புதுச்சேரியில் முகாமிட உள்ளன.  புதுச்சேரி இலக்கியத் திருவிழா (THE PONDY LIT FEST 2019) என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆளுநர் மாளி கையின் ஆதரவோடு ஒரு குழு இந்துத்துவ வகுப்புவாத வெறியை புதுச்சேரியில் விசிறிவிட அனைத்து முயற்சிகளை யும் செய்தது. இடதுசாரி ஜனநாயக இயக்கங்களும், முற்போக்கு கலை இலக்கிய அமைப்புகளும் எடுத்தமுன் எச்சரிக்கை நடவடிக்கையினால் அதுபின்னுக்குத் தள்ளப் பட்டது.

அலையன்ஸ் பிரான்சிஸ், பிரெஞ்சு  தூதரகம் ஆகியவை கொடுத்த ஆதரவை திரும்பப் பெற்று அதற்கு துணை நின்ற வர்கள் மீது உரிய நடவடிக்கையும் எடுத்தது. புதுவை அரசும், புதுவை முதல்வரும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அதில் பங்கேற்க இருந்த புதுச்சேரி அறிஞர்களும் கலந்து கொள்ள வில்லை.  இவற்றையெல்லாம் மீறி நடைபெற்ற கலந்துரையாடல்க ளில் பொய்யான தகவல்கள், புனைவுகள், வரலாற்றுப்  புரட்டல்கள், பெரும்பான்மை தேசியவாதம், சிறுபான்மை மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் போன்றவைகளே விவாதப் பொருள்களாக இருந்திருக்கின்றன. வலைதளங்க ளில் பதிவுகள் ஆவணங்களாக இருக்கின்றன. 

ஆளுநர் மாளிகையின் மறைமுக ஒத்துழைப்புடன்...

இச்சூழலில் இந்த ஆண்டும் வருகிற   செப்டம்பர் 27 முதல் 29 வரை தனியார் விடுதியில் நிகழ்ச்சிகளை நடத்திடத்   திட்டமிட்டுள்ளனர். இந்தியாவை பாரத் சக்தி என்றும், அது ஆன்மிகமயமானது, எல்லையற்றது போன்ற அரவிந்த ரின் வார்த்தைகளை இவர்களது பிற்போக்குத்தனமான, அடிப்படை வாதத்திற்கு திரித்துப் பயன்படுத்தி அதையே விழா வின் நோக்கமாய் சித்தரிக்கிறார்கள். இதற்கு முழுமையாக ஆளுநர் மாளிகை ஆதரவையும், ஒத்துழைப்பையும்   மறை முகமாகத்  தருவது அழைப்பிதழைப் பார்த்தாலே தெரியும். புதுச்சேரியில் இலக்கியத் திருவிழா நடப்பதிலோ, நடத்துவதி லோ நமக்கு ஆட்சேபனை இல்லை. மாற்றுக் கருத்துகள், அதன்மீது விவாதங்கள் வரவேற்கக் கூடியவை.  ஆனால் இலக்கியத் திருவிழா என்ற பெயரில் பொது அமைதியையும் பிளவையும் உண்டாக்கும் சக்திகளை நாம் அனுமதிக்கப் போகிறோமா? 

புதுச்சேரியை சேர்ந்தவர்கள் இல்லாத புதுச்சேரி விழா!?

இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் உரையாளர்கள் அனை வரும் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர்கள், அதன் ஊதுகுழல்க ளாக விளங்கும் பத்திரிகைகளின் ஆசிரியர்கள், கட்டுரை யாளர்கள், பா.ஜ.கவில் கட்சி பதவி வகிப்பவர்கள், பல மாநிலங்களில் இருந்து அறிவுஜீவிகள்?, ஆய்வாளர்கள்? என்ற பெயரில் புதுச்சேரிக்கு வருகிறார்கள். இவர்கள் நாள் தோறும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக, வகுப்புவாத வெறியை திட்டமிட்டு வளர்த்து வருபவர்கள்.  உதாரணமாக சியாமா பிரசாத் முகர்ஜி பவுண்டேசன், ப.ஜ.கவின் கொள்கை ஆய்வாளர் அனிர்பான் கங்குலி, பா.ஜ.கவின் இளைஞர் பிரிவு அகில இந்திய பொறுப்பாளர் அமிர்தா பிந்தர், காஷ்மீர் குறித்த பொய்யான தகவல்க ளை நாள்தோறும் பரப்பும் ஆர்திசிங் டிக்கு, “வலம்” பத்திரி கையாளர் ஆர்.எஸ்.எஸ் ஹரன்பிரசன்னா, பிரதமர் மோடியின் அரசியல் ஆலோசகர் அர்ஜித் மஜும்தார், பா.ஜ.க.வின் சுயராஜ்யா பத்திரிகையின் ஆசிரியர்கள் அரவிந்தன் நீலகண்டன், காஞ்சன் குப்தா, ராகவன் ஜகன் நாதன், சுப்ரமணிய சாமியின் சீடர் மரியாநிகில், அம்பேத் கர் அவர்களை இந்துத்துவ வாதியாக சித்தரிக்கும் பா.வெங்க டேசன், இதேபோன்ற வகுப்புவாத கருத்துகளையுடைய ஆர்.எஸ்.எஸ் பின்னணியைக் கொண்ட 97 நபர்கள் இத்திருவிழாவில்  பங்கேற்கிறார்கள்.  

நிகழ்ச்சியின் உரையாளர்கள் நமக்குத் தெரிகிறது. பார்வையாளர்கள் யார்? இதுவரை தெரியவில்லை. அனை வருக்கும் அனுமதி உண்டா? தெரியவில்லை. இலக்கிய நிகழ்வா? ஆர்.எஸ்.எஸ்.சின் பயிற்சிப் பட்டறையா?    இந்நிகழ்ச் சியில் புதுச்சேரியைச் சேர்ந்த கலை இலக்கியவாதிகளோ, அறிஞர் பெருமக்களோ பங்கேற்காத புதுச்சேரி விழா.. இந்நிகழ்ச்சியின் திட்டமிடலை பார்த்தால் அகில இந்திய ஆர்.எஸ்.எஸ். முகாம் போல் தோற்றமளிக்கிறது இந்நிகழ்வுகளை வெளிஉலகிற்கு தெரிவிப்பதற்கும், பொது வெளியில் சமூக வலைதளங்களில் பகிர்வதற்கும் உள்ள  “மீடியா பார்ட்னர்களின்” பட்டியலைப் பார்த்தால் இந்நிகழ்ச்சியின் நோக்கம் நமக்குப் புரியும். இந்த மீடியாக்கள் நாள் தோறும் ஒரே தேசம், ஒரே மொழி,ஒரே உடை, ஒரே மதம் என்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒற்றை கலாச்சா ரத்தின் “பெருமைகளை” பேசிவருபவை.   

அறிவுஜீவிகளின் போர்வையில்...

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று அடைக்கலம் தேடி வந்த இலக்கிய வாதிகளைப் போற்றிப் பாதுகாத்து அவர்களுடைய பணிகளைச் செய்வதற்கு துணை நின்ற வரலாறு புதுச்சேரி மாநிலத்திற்கே உரிய தனித்துவ மாகும். அது இன்றளவிலும் தொடர்ந்து  அறிவுஜீவிகளையும், எழுத்தாளர்களையும் கரம்கூப்பி வரவேற்று ஆதரவளித்து வருகிறது. இப்பாரம்பரியமிக்க புதுச்சேரியில் இலக்கியத் திருவிழா என்ற பெயரில் பன்முகக் கலாச்சாரத்தைக் கொண்ட இந்திய சமூகத்தை, இறையாண்மையை சிதைக்கும் புல்லுருவிகள் அறிவுஜீவிகள் போர்வையில்  பங்கேற்கும் நிகழ்வு புதுச்சேரியில் நடப்பது வரலாற்றுச் சோகமே!.    இந்திய அரசியலில் வலதுசாரி சக்திகள் மேலோங்கி இருப்பதால், புதுச்சேரி ஆளுநர் மாளிகை மக்கள் நலத் திட்டங்களுக்கு தடைக்கல்லாக இருப்பதும் தேர்ந்தெடுக் கப்பட்ட ஆட்சியாளர்களை செயல்படவிடாமல் தடுத்துக் கொண்டிருப்பதும் நாள்தோறும்  தொடர்கிறது.   அரசியல் அமைப்புச் சட்டம், நீதிமன்ற வழிகாட்டு முறைகள், ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி பன்முகத் தன்மைக் கொண்ட சமூகங்கள் நல்லிணக்கத்துடன் அமைதி யாக வாழ்கின்ற மாநிலம் புதுச்சேரி. அதை  சங்பரிவாரங்கள் கூடுமிடமாக, பதற்றம் மிகுந்த பகுதியாக மாற்றுவதற்கு ஆளுநர் மாளிகை எத்தனிக்கிறது.      புதுச்சேரியில் வாழுகின்ற கலை இலக்கியவாதிகளும், அறிவுஜீவிகளும், இலக்கிய திருவிழா என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவவாதிகளின் பொய்யான புனைவுக ளுக்கு இடமளிக்கமாட்டார்கள். கடந்த காலங்களில் புதுச்சேரி யில் இதுபோன்ற நிகழ்வுகளை இடதுசாரி ஜனநாயக இயக்கங்களும், முற்போக்கு கலை இலக்கிய அமைப்புக ளும் எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பது வரலாறு.    

கட்டுரையாளர் : தமுஎகச, மாநிலப்பொருளாளர்

 

;