தமிழகத்திற்கு நாளை ரெட் அலார்ட் அறிவித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் கேரளா, கடலோர கர்நாடகா, புதுச்சேரி, தமிழகம், காரைக்கால் ஆகிய இடங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மகாராஷ்டிரா ஆந்திரா மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவையில் நாளை மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூரில் ஆகிய ஓரிரு இடங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நாளை ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.