tamilnadu

img

ரஜினி பேச்சு உண்மைக்கு புறம்பானது : கே.பாலகிருஷ்ணன்

தஞ்சாவூர், ஆக. 16- மோடி ஏதோ சாதனை செய்துவிட்டது  போல, ரஜினிகாந்த் பேசி வருகிறார். இது உண்மைக்குப் புறம்பானது. எந்த நோக்கத்துக்காக இதை பேசுகிறார் எனத் தெரியவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்தார். தஞ்சாவூரில் ஆகஸ்ட் 15 அன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ரஜினிகாந்த் அரசியல் பேச மாட்டேன் என சொல்லி இருந்தார். ஆனால், காஷ்மீர் பிரச்சனை அரசியல் ஆகி விட்டது. இந்நிலையில், காஷ்மீர் பிரச்சனையை பற்றி பேசுவதே அரசியல் தான். மோடியை நியாயப்படுத்துவது அரசியல்தான்” என்று கூறினார். 

மோடி அரசு நாட்டின் நிர்வாகத்தை முழுக்க முழுக்க மாற்றி, அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என  நினைக்கிறது. இதே நிலை நீடித்தால் அனைத்து மாநிலங்களிலும் ஒரே முதல்வர் என அறிவித்தாலும் அறிவிப்பார். ஒரேநாடு, ஒரே தேசம் என  அதிபர் ஆட்சி முறையை கொண்டு வர முயற்சிக்கிறார் என்றும் கே.பால கிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.  மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. விவசாயிகள் சாகுபடி தொடங்குவதற்கு ஏதுவாக பயிர் கடன், விதை நெல் உள்ளிட்ட வற்றை உடனடியாக வழங்க வேண்டும். குடிமராமத்து பணிகள் முறையாக நடைபெறவில்லை. இத்தனை காலம் ஏதும் செய்யாமல் இருந்து விட்டு, வாய்க் கால்களில் தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் மராமத்து என்பது எதற்காக என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.