tamilnadu

img

புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை உருவாக்கி தனியார் பொறியியல் கல்லூரிகளை இணைக்க கோரிக்கை!

தமிழகத்தில் 550-க்கு மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகிறது. அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்ட பின்னர், தமிழக பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்திற்கு துணைத் தலைவர் மற்றும் கூடுதல் உறுப்பினர்களை தமிழக உயர்கல்வித்துறை நியமித்தது.


இந்த நியமனங்கள் தன்னை கலந்து ஆலோசிக்காமல் நடைபெற்றதாக கூறி பொறியியல் மாணவர் சேர்க்கை தலைவர் பொறுப்பில் இருந்து சூரப்பா ராஜினாமா செய்தார். இதை அடுத்து, இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கலந்தாய்வு நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது.


அண்ணா பல்கலைக்கழகம் கொண்டு வந்த தேர்வு சீர்திருத்தங்கள், உள்ளிட்ட சில கடுமையான நடவடிக்கைகள் காரணமாக ஊரக பகுதிகளில் செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் தேர்ச்சி விகிதம் குறைந்ததுடன், மாணவர் சேர்க்கையும் குறைந்துள்ளது.


இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் தனியார் பொறியியல் கல்லூரி கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து தனியார் கல்லூரிகளை பிரித்து, தனியாக தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை உருவாக்கி அதனுடன் பொறியியல் கல்லூரிகளை இணைக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

;