tamilnadu

img

மாவீரன் பகத்சிங்கின் அமைப்பில் பி.ராமமூர்த்தி - ஹர்கிஷன் சிங் சுர்ஜித் - எஸ். ஏ. பெருமாள்

காந்திஜி மீதான நம்பிக்கை குறைவு காங்கிரஸ் இயக்கத்தின் வழிமுறைகள் மீதே பகத்சிங்கிற்கு நம்பிக்கை குறைவை ஏற்படுத்தியது. இளைஞர்களையும், யுவதிக ளையும் மாணவ - மாணவிகளையும் நாட்டு விடுதலைக்கான எழுச்சிகரப் போரில் ஈடுபடுத்த தீரமிக்க அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென்று அவர் கருதினார். தன் சக தோழர்களுடன் விவாதித்த அவர் “நவ ஜவான் பாரத் சபா” (இளம் வீரர் பாரத சங்கம்) என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்கி னார். ரகசியச் சங்கமாக உருவாக்கப்பட்ட இந்த சபையின் தலைவராக பகவதி சரணும், பொதுச் செயலாளராக பகத்சிங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த அமைப்பின் துவக்கக் கூட்டம் தேசியக் கல்லூரியின் பிராட்லா மண்ட பத்தில் நடைபெற்றது. புரட்சிப் பேரொளி கர்தார் சிங்கின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது. அதன்பின் பகவதி சரணும், பகத்சிங்கும் உணர்ச்சிமிகு உரையாற்றினர். பகத்சிங் பேசும்பொழுது ஆயுதப் போராட்டம் மூலமே, இந்திய நாட்டின் விடுதலையைப் பெற முடியுமென்று எடுத்துக் கூறி அதற்காக நமது உயிரையும் தியாகம் செய்வோம் என்றுசூளுரைத்தார். தனது உரையின் முடிவாக ‘புரட்சி ஓங்குக’ என்று அவர் உரத்து முழக்க மிட்டார். உணர்ச்சி வெள்ளத்தில் சூழ்ந்திருந்த மக்கள் திரளும் அதை எதிரொலித்தது.
புதிய முழக்கங்கள்
பகத்சிங் பேசி முடித்ததும் தனது விரலை கீறி அதில் வழிந்த ரத்தத்தால் கர்தார் சிங்கின் படத்திலும், பாரத மாதாவின் படத்திலும் திலகமிட்டார். கூட்டமே உணர்ச்சிமயமாகி மீண்டும் இன்குலாப் முழக்கமிட்டது. இக்கூட்டத்தில் சில முடிவுகள் எடுத்தனர். காந்தி முழங்கி வந்த அரகர மகாதேவ், அல்லா ஹூ அக்பர், சத்ஸ்ரீஅகால் போன்ற மத கோஷங்களை நிறுத்துவது, அதற்குப் பதிலாக ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ கோஷமிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அத்துடன் ‘ஏகாதிபத்தி யம் ஒழிக’ என்ற கோஷமும் சேர்க்கப்பட்டது. மேலும் நவ ஜவான் பாரத் சங்க உறுப்பினர்கள் தங்கள் மதச் சின்னங்களை அணியக்கூடாது என்றும் முடிவு செய்தனர். பகத்சிங் அன்று முதல் தலைமுடியை வெட்டித் தாடியை மழித்து முறுக்கு மீசை, தொப்பியுடன் தன்னை மாற்றிக் கொண்டார். அவரது மீசையும், தொப்பியுடன் இளைஞர்களிடம் பிற்காலத்தில் பகத்சிங் மீசை பகத்சிங் தொப்பி என்று பிரபலமாகியது. மகாத்மா காந்தி, திலகர் போன்ற தலைவர்களே இந்துமத உணர்வுக ளைப் பிரச்சாரம் செய்து தூண்டிவந்த அந்தக் காலத்தில் பகத்சிங்கும் அவரது தோழர்களும் தங்கள் மத்தையே தூக்கியெறிந்தது புரட்சிகரமானதுதான். நவ ஜவான்பாரத் சபா வெகு விரையில் நாடு முழுவதும் பிரபலமானது. குறிப்பாக பஞ்சாப், தில்லி, ஐக்கிய மாகாணம் போன்றவற்றில் மிகுந்த செல்வாக்குப் பெற்றது. பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்களை அது மிகவும் ஈர்த்தது. இந்த அமைப்பு மற்றொரு துணை அமைப்பையும் உருவாக்கியது. “ஜாத் பாத் தோடக் மண்டல்” என்ற பெயரில் சாதியை நொறுக்கும் சபையையும் துவக்கி யது. இது சாதி ஒழிப்பிற்காகவும், சமூக சீர்திருத்தத்திற்காகவும் பாடுபட்டது. “நவ ஜவான் பாரத் சபா”வின் நோக்கத்தையும், திட்டத்தையும் பகத் சிங்கின் சகதோழர் சிவவர்மா விவரிக்கிறார்: “இந்த அமைப்பானது ஒரு விதத்தில் புரட்சி இயக்கத்தின் பகிரங்க மேடையாகும். பொதுக் கூட்டங்கள், அறிக்கைகள், துண்டுப் பிரசுரங்கள் ஆகிய வற்றின் மூலம் புரட்சியாளர்களின கருத்துக்களையும் நோக்கங்களையும் பிரச்சாரம் செய்வதே இதன் முக்கிய செயல்திட்டமாகும். அவர்கள் உலகம் முழுவதும் உள்ள பிரச்சனைகளை, அதாவது சுரண்டல் வறுமை, சமத்துவ மின்மை போன்றவைகளை ஆராய்ந்து இந்தியாவிற்கு அரசியல் சுதந்திரத்து டன் பொருளாதாரச் சுதந்திரமும் தேவை என்றும் முடிவிற்கு வந்திருந்தனர். பயாஸ்கோப்பில் - “சிலைடுகளின்” வழியாக அமரத் தியாகிகளான புரட்சி யாளர்களின் படங்களைக் காட்டி விளக்கம் தந்து புரட்சி இயக்கம் பற்றி பிரச்சாரம் செய்வதும், இந்த அமைப்பின் குறிக்கோளாக இருந்தது. அது, பிரச்சாரத்திற்கு ஒரு வலுவான சாதனமாக விளங்கியது. ரகசியக் காரியங்களுக்கு விரிவான களத்தை அமைப்பதற்கும், மக்களிடையே ஏகாதிபத்திய எதிர்ப்பு, தேசியக் கருத்துக்களைப் பரப்புவதற்கும் இந்த அமைப்பு நிறுவப்பட்டது. “நவ ஜவான் பாரத் சபா”வின் உறுப்பினர்களில் இருவர் பின்னாட்களில் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பிரபலத் தலைவர்களானார்கள். ஒருவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான மறைந்த தோழர் பி.ராமமூர்த்தி. மற்றொருவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா ளரான தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித். பி.ராமமூர்த்தி அப்பொழுது காசி இந்து பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. பட்ட வகுப்பு மாணவர். தீவிர தேச பக்த மாணவரான அவர் “ஜாதியை நொறுக்கும் சபையிலும்” செயல்பட்டார். கல்லூரி இறுதித் தேர்வு முடிந்த அடுத்தநாள் காலையில் அந்நியத் துணியை பகிரங்கமாக எரித்து 6 மாத கடுங்காவல் தண்டனை பெற்றார்.  மற்றொருவரான ஹர்கிஷன் சிங் சுர்ஜித் அச்சமயத்தில் பள்ளி மாணவரா யிருந்தார். பகத்சிங்கின் வீரமும், தீரமும் அவரைக் கவர்ந்திழுத்தது. பகத்சிங்கின் உயிர்தியாகம் அவரது படிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதை அவரே கூறுகிறார்:  “நான் எனது 14வது வயதில் நவஜான் பாரத் சபாவில் சேர்ந்தேன். பகத் சிங்கும் அவரது தோழர்களும் வெளிப்படுத்திய வீரச் செயல்கள் மட்டுமின்றி அவர் பிரச்சாரம் செய்த விஞ்ஞான சோசலிசக் கருத்துக்களும் என்னைக் கவர்ந்தன...” லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் பூரண சுதந்திரம் வேண்டும் என்ற முழக்கங்கள் எதிரொலித்தன. நாட்டு மக்களிடையே சட்டமறுப்பு இயக்கம் மிகப்பரந்தளவில் செல்வாக்குப் பெற்றிருந்தது. அதற்கு அடுத்த வருடம் பகத்சிங்கின் உயிர்த்தியாகம் அரங்கேறியது. தனிப்பட்ட முறையில் அந்த நிகழ்ச்சி என்னை மிகவும் உலுக்கிவிட்டது. அவரது மகத்தான தியாகத்தைத் தொடர்ந்து நான் படிப்பைத் துறந்தேன். தேசவிடுதலைப் போருக்கு என்னை முழுமையாக அர்ப்பணித்தேன்”.

;